மீண்டும் மீண்டும் நில அதிர்வுகள் ஜப்பான் மக்கள் மத்தியில் தொடர்ந்து பீதி

புதன்கிழமை, 16 மார்ச் 2011      உலகம்
japan 0

 

டோக்கியோ, மார்ச்- 17 - பூகம்பம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானில் நேற்று மீண்டும்  நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவையில் 6.0 ஆக பதிவாகி உள்ளது.

ஜப்பானில் கடந்த 11-ம் தேதி பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தை தொடர்ந்து மிகப்பெரிய சுனாமியும் ஏற்பட்டது. இந்த இரு இயற்கை சீற்றங்களால் ஜப்பானில் பல நகரங்களின் கட்டிடங்கள் தரை மட்டம் ஆயின. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அணு மின்சார நிலையத்தில் 4 அணு உலைகள் வெடித்து சிதறின. இதனால் கதிர்வீச்சு அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இந்த  நிலையில் கடந்த 11-ம் தேதிக்கு பிறகு ஜப்பானில் பலமுறை நில அதிர்வுகள் ஏற்பட்டன.

நேற்று காலை மீண்டும் ஒரு நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்அளவையில் 6.0 ஆக பதிவாகியிருந்தது.

இதற்கு முன்பு ஜப்பானில் அடுத்தடுத்து சிறிய நில நடுக்கங்கள் ஏற்பட்டு அப்புறம்தான் 8.9 என்ற அளவுக்கு மிகப்பெரிய பூகம்பம் கடந்த 11-ம் தேதி ஏற்பட்டது. 

இப்போது மீண்டும் மீண்டும் நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் அடுத்தும் ஒரு மிகப்பெரிய பூகம்பம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் ஜப்பான் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

நேற்றைய நில நடுக்கம் ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சு என்ற இடத்தில் ஏற்பட்டுள்ளது.

ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியின் காரணமாக ஜப்பான் நிலப்பரப்பு சுமார் 8 அடி தூரத்திற்கு நகர்ந்து சென்றுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: