முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதிக் பாஷா மரணத்தில் மர்மம் நீடிப்பு

வெள்ளிக்கிழமை, 18 மார்ச் 2011      ஊழல்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.18 - சாதிக்பாஷாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் டெக்கால் மழுப்பலாக பதில் அளித்ததால் சாதிக்பாஷாவின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது. முன்னாள் மத்திய மந்திரி அ.ராசாவின் கூட்டாளியும் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் மேலாண் இயக்குனர் சாதிக்பாஷா நேற்று முன்தினம் அவரது இல்லத்தில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியப்படி கிடந்தார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவாகரத்தில் ஊழல் பணம் ரூ.600 கோடியை கிரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக சி.பி.ஐ. கடந்த டிசம்பர் மாதம் சாதிக்பாஷாவின் வீட்டையும் அலுவலகத்தையும் சோதனையிட்டனர். 

சோதனையின் அடிப்படையில் சாதிக்பாஷா பல்வேறு சந்தர்ப்பங்களில் சி.பி.ஐ.யினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முக்கிய துருப்புச் சீட்டாக சாதிக்பாஷா இருந்தார்.

சமீபகாலமாக சாதிக்பாஷா தனது மனைவி மற்றும் உறவினர்களின் ஆலோசனைப்படி அப்ரூவராக மாற நினைத்துள்ளார். நேற்று முன்தினம் சி.பி.ஐ. விசாரணைக்கு டெல்லி செல்லவிருந்த சாதிக்பாஷா அங்கு தனது அப்ரூவர் முடிவை சொல்லவிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் தனது வீட்டில் மர்மமான முறையில் பிணமாக தொங்கியுள்ளார். அவருடைய உடலை வீடியோ துணையுடன் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்பதால் அரசு பொது மருத்துவமனையில் நேற்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

டாக்டர் டெக்கால், டாக்டர் யோகலட்சுமி மற்றும் தடவியல் துறை தலைவர் சாந்தகுமார் முன்னிலையில் பிரதே பரிசோதனை நடைபெற்ற முடிவில் டாக்டர் டெக்கால் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

சாதிக்பாஷா மூச்சு திணறல் காரணமாக இறந்துள்ளார். கயிறு கழுத்தை நெறித்துள்ள தடயம் பற்றி தெரிய கழுத்து சதைகள் ஆய்வுக்கு அனுப்பட்டுள்ளது.

தூக்கில் தொடங்கினாரா? இறந்த பிறகு தொங்க விடப்பட்டரா என்பது பின்பே தெரிய வரும். சாதிக்பாஷா இறப்பதற்கு முன் உணவு உட்கொண்டுல்ளார். அது பாதி செரிமான மாஜி உள்ளது. உணவில் விஷம் இல்லை மேலும் ஆய்வுக்காக உடல் உள்ளுறுப்புகள் கிட்னி, குடல் பகுதிகள், ரத்தம் மற்றும் கழுத்து சதைகள் அனுப்பட்டுள்ளது. உடற் உறுப்புகளில் காயம் எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மூச்சு திணறல் காரணமாக இறந்துள்ளார். ஆனால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா என்பது தெரியவில்லை என்ற டாக்டரின் பதில் இந்த விவகாரத்தில் மேலும் மர்மத்தை கிளப்பி உள்ளது. பொதுவாக ஒருவர் தூக்கில் தொங்கினால் குரல்வளை உடையும், கழுத்து எழும்பு முறியும் அது பற்றி டாக்டர் குறிப்பிடாதது இந்த விவகாரத்தில் மர்மத்தை மேலும் தூண்டிவிட்டுள்ளது.

தற்போது சாதிக்பாஷா மரணதினை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் வற்புறுத்திய நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்