முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் கட்டணம் உயர்கிறது ரயில்வே அதிகாரிகள் சூசக தகவல்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜன. - 30 - பயணிகள் ரயில் கட்டணம் தவிர்க்க முடியாதது என்று ரயில்வே அதிகார வட்டாரங்கள் கூறியுள்ளன. அதன்படி பயணிகள் ரயில் கட்டணங்கள் 10 முதல் 12 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் வருகிற பிப்ரவரி மாத கடைசி வாரத்தில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால் 5 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெறுவதால் இந்த ரயில்வே பட்ஜெட் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறுப்படுகிறது.
கடந்த 8 ஆண்டுகளாக பயணிகள் ரயில்கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. இந்தியாவில் பொதுவாக பஸ் கட்டணங்களைவிட ரயில் கட்டணங்கள் குறைவாகவே உள்ளன. அதனால் பஸ்களைக் காட்டிலும் ரயில்களில் பயணம் செய்வதையே பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் ரயில் பயணிகள் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று ரயில்வே அதிகார வட்டாரங்கள் கூறியுள்ளன. பயணிகள் கட்டணம் உயர்த்தப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி ஒரு மாதத்திற்கு முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  இதுகுறித்து ரயில்வே அதிகார வட்டாரங்களிடம் கேட்டபோது, ரயில்வே துறையில் உள்ள கட்டமைப்பு  உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அதிகமாக செயலவிடப்பட்டு வருகிறது என்றும், ரயில்வே துறை தனது திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அந்த வட்டாரங்கள் கூறின. ரயில் கட்டணத்தை உயர்த்தியே ஆகவேண்டும் என்று மத்திய நிதி அணைச்கமும், மத்திய திட்டக்குழுவும் வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. நிதி நெருக்கடியை சமாளிக்க இந்த கட்டணி உயர்வு அவசியம் என்று ரயில்வே வாரியமும் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. பயணிகள் ரயில் கட்டணம் 10 முதல்12சதவீதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்று ரயில்வே வட்டாரங்கள் கூறியுள்ளன. மேலும் ஏ.சி. உள்ளிட்ட உயர் வகுப்பு பயணிகள் கட்டணம் அதிகமாக உயர்த்தப்படலாம் என்றும் தெரிகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்