முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓட்டுக்களை விலைக்கு வாங்கும்படி சொல்லவில்லை - பிரதமர்

சனிக்கிழமை, 19 மார்ச் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச்.19 - நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக ஓட்டுக்களை விலைக்கு வாங்கும்படி தான் யாரையும் அங்கீகரிக்கவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2008 ம் ஆண்டு அமெரிக்க - இந்திய ஆக்கப்பூர்வ அணு சக்தி உடன்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து இடது சாரி கட்சிகள் மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை  வாபஸ் பெற்றன. இதை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு நம்பிக்கை ஓட்டெடுப்பை  நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

அப்போது அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலருக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

இந்த விஷயம் உண்மைதான் என்பதை விக்கிலீக்ஸ் என்ற இணைய தளம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

இதை அடுத்த பாராளுமன்றத்தின் லோக் சபை, ராஜ்ய சபை ஆகிய இரு சபைகளிலும் பா.ஜ.க.உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சினையை கிளப்பி கடும் அமளியில் ஈடுபட்டன. 

நேற்று இரண்டாவது நாளாக பாராளுமன்றத்தில் இந்த பிரச்சினை எதிரொலித்தது.

எதிர்க்கட்சித்தலைவரும் பா.ஜ.க.மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் பேசுகையில் எம்.பி..க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்திற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதனால் லோக்சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. 

நேற்று டெல்லியில் இண்டியா டுடே என்ற பத்திரிகையின் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், விக்கி லீக்ஸ் இணையதளம் மூலம் வெளியான தகவல்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் சில விவரங்களை தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில் - ஓட்டுக்கலை விலை கொடுத்து வாங்கும்படி தான் யாரையும் நியமிக்கவில்லை என்றார்.

இது போன்ற காரியங்களில் ஈடுபட தான் யாரையும் பணிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

( விக்கி லீக்ஸ் இணையதளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே இது குறித்த  சந்தேகங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர் என்று தான் கருதுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

எம்.பி.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பான விஷயம் எதுவும் தனக்கு தெரியாது என்றும் ஓட்டுக்களை விலைக்கு வாங்க  தான் யாரையும் அங்கீகரிக்கவில்லை  என்றும் அவ்ர கூறினார். இந்த  மாநாட்டின் போது பல்வேறு கேள்விகளுக்கும் மன்மோகன் சிங் பததில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்