முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழிற்சங்கங்கள் நடத்திய பந்த் வெற்றி: போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் ஓடின

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

புதுச்சேரி, பிப்.- 3 - புதுவை மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள ரீஜென்சி தொழிற்சாலை தொழிலாளர்களுக்கும், போலீசாருக்கும் கடந்த 27-ந் தேதி நடந்த மோதல் கலவரமாக வெடித்தது இதில் தொழிற்சாலை துணை தலைவர் சந்திரசேகரன், தொழிற்சங்க தலைவர் முரளி மோகன் ஆகியோர் பலியானார்கள்.  இந்த கலவரம் தொடர்பாக ஜகோர்ட்டு நீதிபதியை நியமித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். பலியான தொழிற்சங்க தலைவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் 2-ந் தேதி புதுவையில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.  இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ராஷ்டிரிய ஜனதா தளம், பாரதிய ஜனதா, பகுஜன் சமாஜ், ஜக்கிய ஜனதா தளம், பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளும் ஆதரவு அளித்தன. அதன்படி நேற்று அடைப்பு போராட்டம் நடந்தது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. தனியார் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. ஒருசில அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஓடின. நேரு வீதி, காந்தி வீதி, அண்ணா சாலை, காமராஜர் சாலை, மறைமலையடிகள் சாலை, கடலூர் சாலை, நெல்லித்தோப்பு கடைவீதி ஆகிய பகுதிகளில் அனைத்து கடைகளும் முற்றிலும் அடைக்கப்பட்டு இருந்தன.  அரசு அலுவலகங்கள், பள்ளிகள் இயங்கின. ஆனால் தனியார் பள்ளிகள் இயங்கவில்லை. இதேபோல தட்டாஞ்சாவடி, சேதராப்பட்டு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் பெரும்பாலான தொழிற்சாளைகள் மூடப்பட்டு இருந்தன.  முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சாலைகளில் போலீசார் ரோந்து சென்றனர். 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். திருபுவனை, திருவாண்டார் கோவில் ஆகிய பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.  பந்த் போராட்டத்தையொட்டி காரைக்காலில் பாரதியார் ரோடு, திருநள்ளார் ரோடு, மாதாக்கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. நேரு மார்க்கெட் செயல்பட்டது. மருந்து கடைகள் திறந்து இருந்தது. அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் இயங்கின. முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்