முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வெளியுறவு செயலாளர் நாளை அமெரிக்கா போகிறார்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், பிப். - 5 - இந்திய வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மத்தாய் நாளை 6 ம் தேதி அமெரிக்கா போகிறார். 3 நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா செல்லும் அவர், அங்கு அமெரிக்க எம்.பிக்கள் மற்றும் வெளியுறவு அதிகாரிகள், வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்துகிறார். அப்போது இரு தரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் அதில் இடம்பெறக் கூடும். குறிப்பாக, இந்திய - அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தம், ஈரான் மீதான பொருளாதார தடை, பாகிஸ்தான் - ஆப்கான் நிலவரம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்திய வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மத்தாய் பேச்சு நடத்துகிறார்.  வெளியுறவு செயலாளரான பிறகு அவர் அமெரிக்கா செல்வது இதுவே முதல் முறையாகும். தனது அமெரிக்க பயணத்தின் போது இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் அவர் பேச்சு நடத்துவார் என்று அமெரிக்க வெளியுறவு அதிகாரி மார்க் டோனர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். வெளியுறவு செயலாளரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony