பாகிஸ்தானில் ஊடக சுதந்திரம் மறுப்பு: அமெரிக்கா கவலை

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூன்.9 - பாகிஸ்தானில் ஜியோ டி.வி. ஒளிபரப்பை அந்நாட்டு அரசு 15 நாட்களாக முடக்கி வைத்துள்ளதற்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்கா வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃப், செய்தியாளர்களிடம் கூறுயதாவது: ஜியோ டி.வி. நிர்வாகத்துக்கு பாகிஸ்தான் மின்னணு ஊடக கட்டுப்பாட்டு ஆணையம் ரூ.1 கோடி அபராதமும் விதித்துள்ளது. இதையடுத்து ஜியோ டி.வி. நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதில், ஜியோ டி.வி. நிர்வாகம் வழக்கு தொடர்ந்ததை நாங்கள் ஆதரிக்க வில்லை. எனினும் உலகம் முழுவதும் ஊடகங்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: