முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீநகர் - பெங்களூர் ஸ்பைஸ் ஜெட்டில் நாசவேலை என புரளி

செவ்வாய்க்கிழமை, 17 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

சண்டிகர், ஜூன்.18 - ஸ்ரீநகரிலிருந்து பெங்களூருவிற்கு இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் நாசவேலை நடக்க இருப்பதாகப் பரவிய புரளியைத் தொடர்ந்து, விமானம் சண்டிகரில் நிறுத்தி வைக்கப்பட்டு பயணிகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சண்டிகர், டெல்லி வழியாக பெங்களூரை வந்தடையும் ஸ்பைஸ்ஜெட்டின் ஸ்ரீநகர் - பெங்களூரு விமானத்தில் அடையாளம் தெரியாத மனிதன் ஒருவர் நாசவேலை நடக்க இருப்பதாக புரளி கிளப்பியுள்ளார். விமான ஊழியர்களின் கவனத்திற்கு வந்த இந்தச் செய்தி குறித்து உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து சண்டிகரில் நிறுத்தப்பட்ட விமானத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதுபற்றி சண்டிகர் விமான நிலைய இயக்குனர் எம்.எஸ் துகான் கூறுகையில், ஸ்பைஸ்ஜெட் விமானம் 509, சண்டிகர் மற்றும் டெல்லி விமான நிலையங்களிலும் நின்று செல்லும்.இந்நிலையில் சண்டிகர் வந்தடைந்த விமானத்தில் நாசவேலை நடக்க உள்ளதாக செய்தி ஒன்று பரவியது.

அதனால் சண்டிகரில் நிறுத்தப்பட்ட விமானத்தில் சுமார் 45 நிமிடங்கள் சோதனை நடத்தப்பட்டது. மேலும், பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளும் சோதனையிடப்பட்டன. இறுதியில் நாசவேலை குறித்த தகவல் புரளி எனக் கண்டறியப்பட்டது. மேலும், அவ்விமானத்தில் பயணித்த பயணி ஒருவரால்தான் இச்செய்தி பரவியுள்ளது என்பது கண்டறியப்பட்ட போதும், வதந்தியைக் கிளப்பிய நபரை சரியாக இனம் காண இயலவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago