முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகளை அடக்க அமெரிக்காவை எதிர்பார்க்கும் ஈராக்

வியாழக்கிழமை, 19 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

பாக்தாத், ஜூன்.20 - ஈராக்கில் அரசுக்கு எதிரான தீவிரவாத படைகள் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் பலவற்றை கைப்பற்றிவிட்ட நிலையில், தொடர்ந்து முன்னேறி வரும் தீவிரவாத படைகளை கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்காவின் உதவியை கோரியுள்ளது ஈராக். 

பாக்தாத் நோக்கி முன்னேறிய தீவிரவாதிகள், ஈராக் அரசு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான பாய்ஜி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் ஒரு பகுதியையும் கைப்பற்றினர். இந்நிலையில், தீவிரவாதிகள் ஆதிக்கத்தை ஒழிக்கும் வகையில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்துமாறு ஈராக் கோரியுள்ளது. இது தொடர்பாக சவுதி அரேபியாவில் இருந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈராக் வெளியுறவு அமைச்சர் ஹோஷியார் செபாரி, தீவிரவாத படைகள் மீது வான்வழி தாக்குதல் நடத்துமாறு ஈராக் அரசு அதிகாரப்பூர்வமாக கோரியுள்ளது என்றார். 

இருப்பினும், ஈராக்கில் தற்போது நிலவும் பிரச்சினைக்கு ராணுவத்தால் மட்டுமே தீர்வு காண முடியாது. அதற்கு உள்நாட்டு அரசியலில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என உணர்ந்திருப்பதாகவும் கூறினார். கடந்த 8 நாட்களாக சன்னி முஸ்லீம் தீவிரவாத படைகள் ஈராக்கில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்காவும் தயாராக இருப்பதாகவே வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது. ஈராக்கில் கடந்த 2003-ம் ஆண்டு அப்போதைய அதிபர் சதாம் ஹூசைன் அரசை கவிழ்த்து சன்னி முஸ்லீம் படைகள் நாட்டை கைப்பற்றியபோது அமெரிக்க ராணுவம் பல கோடி பில்லியன் டாலர் செலவழித்து இராக் ராணுவத்தினருக்கு பயிற்சி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை பாதுகாக்கும் வகையில் அங்கு கூடுதல் படைகளை அமெரிக்கா அனுப்பியிருந்தாலும், தீவிரவாதிகளுக்கு எதிராக முழுவீச்சில் தாக்குதல் நடத்த களத்தில் இறங்குவது அமெரிக்கா இன்னும் இறுதி முடிவு செய்யவில்லை என்றே கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்