முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுடப்பட்ட விமானத்தின் கருப்புப் பெட்டி ஒப்படைப்பு

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2014      வர்த்தகம்
Image Unavailable

 

கோலாலம்பூர், ஜூலை.23 - சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியை உக்ரைன் கிளர்ச்சியாளர்கள், மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தன்னை, உக்ரைனின் டோனெட்ஸ்க் பிராந்தியத்தின் பிரதமராக அறிவித்துக்கொண்டுள்ள அலெக்சாண்டர் பொரோடாய், மலேசிய உயர்மட்ட குழுவினரிடம் கருப்புப் பெட்டியை ஒப்படைத்துள்ளார். இதற்கிடையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளும் மலேசிய ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளதோடு சர்வதேச விசாரணைக் குழுவினர் சம்பவப் பகுதியை சுலபமாக அணுக கிளர்ச்சியாளர்கள் உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

விமானம் சுட்டு வீழ்த்த உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ரஷ்யாவும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

இருப்பினும் அத்தீர்மானத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டு அதன் பின்னரே ரஷ்யா ஒப்புதல் அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்