முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கி., எதிரான டெஸ்ட்: இளம் வீரர்களை சேர்க்க யோசனை

செவ்வாய்க்கிழமை, 5 ஆகஸ்ட் 2014      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஆக.06 - கவுதம் கம்பீரையும், வருண் ஆரோனையும் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரான சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவருகிறது இந்திய கிரிக்கெட் அணி. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில் அடுத்தடுத்த டெஸ்டுகளில் முறையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து வெற்றி கண்டது. வரும் 7ம்தேதி தொடங்க உள்ள, நான்காவது டெஸ்டுக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் ஷர்மா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறப்போவதில்லை.

இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறுகையில் "நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள மான்செஸ்டர் மைதானம்தான், இங்கிலாந்து நாட்டிலுள்ள ஆடுகளங்களிலேயே வேகப்பந்து வீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்க கூடிய ஆடுகளமாகும். எனவே இந்தியாவின் அதிவேக பந்து வீச்சாளரான வருண் ஆரோனுக்கு இப்போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று கருதுகிறேன்.டெஸ்ட் தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள இந்த நேரத்தில், இந்தியாவுக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட வேண்டியுள்ளது. எனவே ஓப்பனிங் பேட்ஸ்மேன் கவுதம் கம்பீரையும் அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கம்பீர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நான் உறுதியளிக்கவில்லை. அதே நேரம் எந்த பக்கமும் ஆட்டம் மாறலாம் என்றிருக்கும் இப்போதையை சூழ்நிலையில், புதிய முயற்சிகள் அவசியம்.

அதிகப்படியான போட்டிகளில் விளையாடியதுதான், முகமது ஷமியால் விக்கெட் வீழ்த்த முடியாததற்கு காரணம் என்று நான் கூறமாட்டேன். இந்த வயதில் விளையாடாமல் வேறு எந்த வயதில் அவர் விளையாட முடியும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்". இவ்வாறு சவுரவ் கங்குலி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago