Idhayam Matrimony

அணுசக்தி மூலம் இந்தியா அழிவை ஏற்படுத்தாது: பிரதமர்

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

டோக்கியோ, செப்.03 - பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். 4-வது நாளான நேற்று அவர் சேக்ரட் ஹார்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய மோடி பேசியதாவது:

"அமைதியும், அஹிம்சையும் இந்திய சமுகத்தின் மரபணுவில் பின்னிப் பிணைந்திருக்கின்றன. இந்திய மண் புத்த மகான் பிறந்து வாழ்ந்த பெருமையுடையது. புத்தர், அமைதியை நிலைநாட்டவே வாழ்ந்தார். அதற்காகவே பாடுபட்டார். அந்த செய்தி நாடு முழுவதும் பரவிக் கிடக்கிறது. எனவே அணுசக்தி மூலம் இந்தியா அழிவை ஏற்படுத்தாது.

இந்தியா அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததற்குக் காரணம் அதில் சில குறைபாடுகள் இருப்பதே. சர்வதேச சமூகம் சில நடைமுறைகளை அறிமுகப்படுத்தலாம். ஆனால் இத்தகைய ஒப்பந்தங்களையும் கடந்து கட்டுப்பாட்டுடன் இருப்பது சமூகத்தின் சிறப்பு. மகாத்மா காந்தி தலைமையில் கோடிக்கணக்கான மக்கள் அஹிம்சா வழியில் சுதந்திரத்தை பெற்றனர். இந்திய சமூகம் அஹிம்சையை கடைபிடிக்கிறது என்பதற்கு இதுவே மிகப்பெரிய அடையாளம். அமைதியும், அஹிம்சையும் இந்திய சமூகத்தின் மரபணுவில் பின்னிப் பிணைந்திருக்கின்றன" என்றார். இந்தியா, அணு ஆயுதங்களை வைத்திருப்பதோடு, அணு ஆயுதங்கள் பரவலை தடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மறுப்பு தெரிவிப்பது குறித்த மோடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் இவ்வாறு பேசினார்.

மாறிவரும் சர்வதேச சூழலில் மகளிர் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பது மிகவும் அவசியமாகும் என்றும் மோடி கூறியுள்ளார். இதுகுறித்து மோடி மேலும் பேசியதாவது:

"இந்து மதத்தின் பெண் தெய்வங்களில், சரஸ்வதி கல்விக் கடவுளாக, லட்சுமி செல்வத்தை அளிக்கும் கடவுளாக, மஹாகாளி பாதுகாப்பை நல்கும் தெய்வமாக, அன்னபூரணி உணவு பாதுகாப்பை தரும் தேவியாக இருக்கின்றனர். மதத்தில் பெண்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருப்பதுபோல், இந்திய அரசியலமைப்பிலும் பெண்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. எனது அமைச்சரவையில், 25% பேர் பெண்கள். ஏன், இந்திய வெளியுறவு அமைச்சரும் ஒரு பெண். இங்கிலாந்து இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்துச் சென்றபோது நாட்டில் 9% பெண்கள் மட்டுமே கல்வி கற்றிருந்தனர். ஆனால், அதன்பிறகு பெண் கல்விக்காக பல்வேறு கட்டங்களில் பலவகையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, பல்வேறு அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட பரிசுப் பொருட்களை ஏலம் விட்டதன் மூலம் கிடைத்த ரூ.78 கோடி பெண் கல்விக்காக வழங்கி இருக்கிறேன். மாறிவரும் சர்வதேச சூழலில் மகளிர் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பது மிகவும் அவசியமாகும்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago