முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க பயணத்தின் போது மோடியுடன் பேச நவாஸ் விருப்பம்

வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், செப்.06 - இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திரமோடி கடந்த மே.26ம் தேதி பதவி ஏற்றார். அவரது அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் 2 பயணமாக இந்தியா வந்து பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பாகிஸ்தான் உயர் கமிஷனர் அப்துல் பஷீத் சந்திப்பு நிகழ்த்தியதை தொடர்ந்து, இரு நாடுகளின் வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே சுமூக உறவு ஏற்படும் நிலை உருவானது.

இதனால் இரு நாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதை போல தெரிந்தது. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்நாட்டு நெருக்கடியில் நவாஸ் ஷெரிப் சிக்கிக்கொண்டுள்ளார். இதனால் இந்திய-பாகிஸ்தான் உறவு மேலும் சீர்கெடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த சூழ்நிலையிலும், நரேந்திர மோடிக்கு, நவாஸ் ஷெரிப் மாம்பழ கூடையை பரிசாக அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அலுவலக வழித்தடத்தின் மூலம் இந்த பரிசு மோடிக்கு கிடைக்கப்பெற்றதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீர் சென்றிருந்த மோடி, பாகிஸ்தான் மறைமுக யுத்தம் நடத்தி வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கும் ஷெரிப் பதில் பேசாமல் மவுனம் காத்தார். இந்தியாவுடன் நட்பை தொடர வேண்டும் என்பதில் ஷெரிப் காட்டும் ஆர்வம்தான் அவரது நடவடிக்கைகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்