முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் முன்கூட்டியே தேர்தல்: ராஜபக்சே

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

கொழும்பு - தற்போதைய இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில் அந்த நாட்டில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதாக அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார். மேலும் இலங்கையில் இது வரை இல்லாத வகையில் மூன்றாவது முறையாக அவர் அதிபர் பதவிக்கு போட்டியிட விரும்புகிறார்.
முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியிருப்பதாக அவர் தொலைக்காட்சியில் தெரிவித்தார். இது குறித்து டுவிட்டர் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிலில், தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி விட்டேன். மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார். 69 வயதாகும் அதிபர் ராஜபக்சே கடந்த 2005ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து விடுதலை புலிகளுடனான வெற்றிக்கு பின்பு அவர் சந்தித்த 2010ம் ஆண்டு தேர்தலில் அமோக வெற்றியை கண்டார். எனினும் அண்மை காலமாக அவரது செல்வாக்கு சரிந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் தன்னிடம் அளவுக்கு அதிகமாக அதிகாரங்களை குவித்து வைத்திருப்பதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தேர்தலை நடத்த அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டு வந்தது. அந்நாட்டு அரசியல் சாசனப்படி நான்கு ஆண்டுகள் நிறைவு செய்த அரசால் முன்கூட்டியே தேர்தல் நடத்த அழைப்பு விடுக்க முடியும்.
அங்கு சட்டப்பிரிவை அண்மையில் உச்சநீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து முன்கூட்டியே தேர்தல் நடத்துவதாக ராஜபக்சே அறிவித்துள்ளார். ராஜபக்சேவுக்கு எதிரான அரசியல் சூழல் நிலவுவதாக கருதப்படும் நிலையிலும் அதனை பொருட்படுத்தாமல் இரு ஆண்டுகள் பதவிக்காலத்தை துறந்து அவர் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜபக்சே தன்னிடம் குவிந்துள்ள அதிகாரத்தை குறைக்க வலியுறுத்தி வந்த அவரது கூட்டணி கட்சியான தேசிய பாரம்பரிய கட்சி கூட்டணியில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்தது. இலங்கை மக்கள் தொகையில் புத்த மதத்தினர் 70 சதவீத பங்கு வகிக்கும் நிலையில் புத்த பிட்சுகளின் தலைமையிலான தேசிய பாரம்பரிய கட்சி ஆளும் கூ ட்டணியில் இருந்து விலகியிருப்பது ராஜபக்சேவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து