இயற்கை சீற்றங்களான நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறிய ‘மை ஷேக்’ என்ற மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கம் வருவதை இந்த ஆப் மூலம் எளிதாக முன்கூட்டியே அறியலாம். சீஸ்மோமீட்டர் எனும் கருவியினால் மொபைலில் உள்ள ஜிபிஸ் மூலம் இந்த அதிர்வுகள் உணரப்பட்டு அறிவிக்கப்படுகிறது. இது வரை இரண்டு லட்சம் பேர் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
இன்றைக்கு நவ நாகரிக நங்கைகளின் பிரத்யேகமான பேஷன் பொருளாக இருப்பது லிப்ஸ்டிக். ஆடைகளின் வண்ணங்களுக்கு ஏற்ப விதவிதமான லிப்ஸ்டிக்குகளை இன்றைய டீன்ஸ்கள் தங்களது ஹேண் பேக்கிலேயே வைத்து செல்லும் காலமாகி விட்டது. அனைவரும் நினைப்பது போல இது மேல் நாட்டு நாகரிகம் அல்ல. லிப்ஸ்டிக்கை முதன் முதலில் கண்டு பிடித்தவர்கள் இந்தியர்கள். சிந்து சமவெளி நாகரிகத்திலேயே லிப்ஸ்டிக் பயன்பாடு குறித்த பதிவுகள் உள்ளன. சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பே பஞ்சாப், ராஜஸ்தான் பெண்டிர் மணமகனை அலங்கரிக்க விதவிதமான இயற்கை மூலிகைகளை பயன்படுத்தி லிப்ஸ்டிக் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் இயங்கும் நூலகங்களில் ஒரு வியக்கத்தக்க பயனுள்ள நூலகம் டிஜிட்டல் மீடியா நூலகம். அதன் லிங்க் http://www.wdl.org/en/. அது என்ன டிஜிட்டல் மீடியா நூலகம் என்று வியப்பாக இருக்கிறதா? ஆம், இதில் உலக சரித்திரத்தின் பதிவுகளை டிஜிட்டல் வடிவில் பதிந்து தருகிறது.உலகெங்கும் நம் நினைவிற்குச் சிக்காத நாட்களிலிருந்து கிடைத்த காட்சிகள், படங்கள், ஓசைகள், சரித்திர, கலாச்சாரக் குறிப்புகள் ஆகிய அனைத்தையும் டிஜிட்டல் மீடியாக்களாக இந்த ஆன்லைன் நூலகத்தில் பதிவுகளாகக் கிடைக்கின்றன.இந்த நூலகத்திற்கு உங்கள் கம்ப்யூட்டர் வழியே சென்று, உலகின் அனைத்து நாடுகள், கலாச்சாரம், சரித்திரம் குறித்தவற்றைத் தேடிப் பெற்று அறிந்து கொள்ளலாம். மொழிகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
வாஸ்ப் – 76பி என்ற ஒரு புத்தம் புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதில் இரும்பு மழை பெய்கிறது என்பதை விண்வெளி அறிஞர்கள் கண்டு வியந்திருக்கிறார்கள்.வாஸ்ப் 76பி என்று அறியப்படும் இந்த கோள், அதனுடைய நட்சத்திரத்தை சுற்றி வரும்போது, அதன் பகல் பகுதி வெப்பநிலை 2,400 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கிறது. இந்த வெப்பநிலை உலோகங்களை ஆவியாக்கும் ன்மை கொண்டது. இரவு நேரப் பகுதியில் இந்தக் கோளின் வெப்பநிலை 1400 டிகிரியாக குறைந்துவிடுகிறது. இந்த வெப்பநிலையில், பகல் நேரத்தில் ஆவியான உலோகங்கள் இறுகி மழையாகப் பெய்கின்றன.ஜெனீவாவை சேர்ந்த ஆய்வாளர் டாக்டர் டேவிட் ஹெரேயின்ச் கூறுகையில், தண்ணீர் துளிகளுக்கு பதிலாக இரும்பு துளிகளின் சாரல் அடித்தால் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள் என்றார்.நேச்சர் என்ற சஞ்சிகையில் இந்த கோள் குறித்த கண்டுபிடிப்புகளை சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
விபத்தை தவிர்க்கும் வகையில், தானாக இயங்கக்கூடிய ஸ்கூட்டரை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். ஒரு நபர் மட்டுமே பயணிக்கக் கூடிய இந்த ஸ்கூட்டரில் நான்கு சக்கரம் உள்ளது.இதன் எடை 50 கிலோ ஆகும். அதிகபட்சமாக மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ஸ்கூட்டர் பயணிக்கும் போது இடையூறுகள் வந்தால் அதனை கண்டறிவதற்காக இதில் சென்சார்ஸ் பொருத்தப்பட்டுள்ளன.
ராஜஸ்தான் மாநிலம ஜெய்ப்பூரில் உள்ள காந்தி நகர் ரயில் நிலையத்தின் சிறப்பு என்ன தெரியுமா.. இந்தியாவில் முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்படும் ரயில் நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இரு மாநிலங்களுக்கு இடைய ஓடும் ரயில் நிலையத்தில் ஜெய்ப்பூர் காந்தி நகரே முழுமையாக பெண்களை கொண்ட முதல் ரயில் நிலையம். கடந்த 2019 பிப்ரவரி மாத இறுதியில் இது செயலுக்கு வந்ததுடன் 40க்கும் மேலான பெண் ஊழியர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


