அழியும் உயிரினங்களில் ஒன்றாக பன்னாட்டு வன விலங்கு சம்மேளனம் இந்திய வகை டால்பின்களை பட்டியலிட்டுள்ளது. இவை இந்தியா, பாகிஸ்தான் பிராந்தியங்களில் உள்ள நன்னீர் நிலைகளில் வாழக்கூடியவை. டால்பின்கள் மனிதர்களோடு நெருக்கமாக பழகக் கூடியவை என்பது நாம் நன்கு அறிந்ததே. இந்த இந்திய வகை டால்பின்களை, கங்கை நதி டால்பின்கள் என குறிப்பிடுகின்றனர். சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா போன்ற ஆழமும் நீளமும் மிக்க நதிகளில் இவை காணப்படும். தற்போது இந்தியாவில் அருகிவிட்ட இவை அண்டை நாடான பாகிஸ்தானில் பாயும் சிந்து நதி, வங்க தேசத்தில் பாயும் பிரம்மபுத்ர தீரங்களில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் கடந்த 1801 இல் இது அதிகாரப்பூர்வமாக கண்டறியப்பட்டது. தற்போது அருகி வரும் இந்த டால்பின்கள் குறைபார்வை உடையவை என்றும் சொல்லப்படுகிறது. எப்போதும் தனித்து திரிபவை. குட்டி போட்டால் குட்டிகளோடு சிறிது காலம் சேர்ந்து சுற்றும். வளர்ந்ததும் மீண்டும் தனித்தனிதான். பாகிஸ்தானில் சிந்து நதியில் தத்தளித்த டால்பினை ஆர்வலர்கள் மீட்டு பாதுகாப்பாக ஆழமான பகுதியில் கொண்டு நீந்த விட்டனர். தற்போது இந்த செய்தி மிகுந்த ஆச்சரியத்துடன் ஆர்வலர்களால் பகிரப்பட்டு வருகிறது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
கை, கால்களில் ஏற்படும் வீக்கத்தை போக்க கூடியதும், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் தன்மை கொண்டதுமான பார்லி அரிசி காய்ச்சலை போக்கும் தன்மை கொண்டது. கொழுப்பு சத்தை கரைக்க கூடியது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க கூடியது. வயது முதிர்வை தடுத்து இளமையை தக்க வைக்கும் மருந்தாக விளங்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடைய இது பெருங்குடல் புற்றுநோய்க்கு தடுப்பு மருந்தாக விளங்குகிறது.
‘செல்பி’ மோகத்தால் ஏற்படும் உயிர் இழப்புகள் குறித்த ஆய்வில், உலகிலேயே இந்தியாவில் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை உலகம் முழுவதும் 127 பேர் ‘செல்பி’ மோகத்தால் உயிரிழந்ததாகவும், இதில், 76 உயிரிழப்புகள் இந்தியாவில் நடந்தவை என்றும் தெரியவந்துள்ளது.
காகிதங்களால் புத்தகங்கள் அச்சடிப்பதற்கு முன்பாக, ஓலை சுவடிகள், தோல், பாப்பரசி போன்ற பல்வேறு வடிவங்களில் புத்தகங்கள் தயார் செய்யப்பட்டன. அவற்றில் மிகுந்த ஆச்சரியம் என்னவென்றால் மனித தோலால் பைன்ட் செய்யப்பட்ட 3 புத்தகங்கள் ஹார்வர்டு பல்கலை கழக நூலகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 1880களின் மத்தியில் ஆர்சென் ஹவுஸே என்ற எழுத்தாளர் தனது நண்பரான டாக்டர் லுடோவிக் பவுலண்டுக்கு அளித்ததாக கூறப்படுகிறது. அந்த மருத்துவர்தான் பெண் நோயாளி ஒருவரின் உடலில் உள்ள தோலால் இந்த புத்தகத்தை பைன்ட் செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த புத்தகம் இந்த நூலகத்தில் 1930களில் இருந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
காற்று மாசுபாட்டால் சூரிய மின்சக்தி உற்பத்தி 25 சதவீதம் வரை பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சீனா, அரேபிய தீபகற்பம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் காற்று மாசுபாடு அதிகம் உள்ளதால் மின்சக்தி உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.
ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. ஒன்று, இதுவரை ப்ளாஷ் பயன்படுத்தாமல், திடீரென்று செய்தால் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படும். மற்றொன்று உடலில் வைட்டமின் சி குறைவாக இருந்தால், ஈறுகளில் இரத்தம் கசியும். எனவே வைட்டமின் சி உணவுகளை அதிகம் எடுத்தால் இதை தவிர்க்கலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


