Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலக சாதனை

இந்தியாவின் புகழ் பெற்ற சமையல் நிபுணர்களில் ஒருவரான விஷ்ணு மனோகர் தொடர்ந்து 57 மணி நேரம் சமைத்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். நாக்பூரில் 52 மணி நேரத்தை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்தச் சாதனை முயற்சியில் 57 மணி நேரம் வரை தொடர்ந்து சமைத்தார்.

மிகவும் சிறியது

போஷ் மொபைல் மைக்ரோ எக்ஸ் எனும் புதிய மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் 2.4 அங்குல திரை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4 இயங்குதளத்தில் செயல்படும். கைக்கு அடக்கமாக உள்ள இதில் 650எம்ஏஎச் அளவிலான பேட்டரித்திறன் மற்றும் ஒரு 13 மெகாபிக்சல் பின்ப்புறகேமரா, 2 மெகாபிக்சல் முன்புற கேமரா உள்ளது.

உலகில் மனிதன் பயன்படுத்துவது வெறும் 1 சதவீதம் நீரை மட்டுமே

உலகம் நீராலானது என்பதை நாம் அறிவோம். பூமியில் சுமார் 71 சதவீதம் நீர்பரப்பே உள்ளது. அவற்றில் 96.5 சதவீத பரப்பை கடல்கள் பகிர்ந்து கொள்கின்றன. பனிப்பாறைகள் 2 சதவீதத்தை பகிர்ந்து கொள்கின்றன. மீதமுள்ள ஆறு, குளம், குட்டை, அருவி, ஏரி ஆகியவற்றில் உள்ள நீரை மட்டுமே மனிதன் பயன்படுத்துகிறான். பூமியில் உள்ள பாதுகாப்பான நீரில் 1 சதவீதம் மனிதன் பயன்படுத்துகிறான்.

தலையணை இல்லாமல்...

தலையணை பயன்படுத்தாமல் படுத்து உறங்குவதால் தண்டுவடம் அதன் இயற்கை நிலையில் இலகுவாக இருக்கும். இதனால் தண்டுவட பிரச்சனை, உடல் வலி போன்றவை ஏற்படாது. கெட்டியான, கடுமையான தலையணை பயன்படுத்துவதால் தண்டுவடத்தில் தீய தாக்கங்கள் உண்டாகலாம். மேலும், தோள்பட்டை மற்றும் கழுத்து வலி உண்டாகாமல் தடுக்க முடியும். உடலின் எலும்பு நிலைகளை சீராக்க முடியும். தலையணை பயன்படுத்தாமல் உறங்கினால் முகத்தில் சுருக்கங்கள் அதிகமாகாது என கூறப்படுகிறது. ஆனால், நேராக படுத்து உறங்கும் பழக்கம் உடையவர்களுக்கு மெல்லிய தலையணை சிறந்தது. இது கழுத்து, தலை, தோள்ப்பட்டை பிரச்சனைகள் உண்டாகாமல் காக்கும்.

பாம்பு கடித்தும் சாகாத மனிதன்

அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியில் 1910 இல் பிறந்தவர் பில் ஹாஸ்ட். இவருக்கு சிறுவயது முதலே பாம்புகள் மீது ஆர்வம் ஏற்பட்டு வந்துள்ளது. 1947 முதல் 1984 வரை புளோரிடாவின்மியாமி செர்பென்டேரியத்தின் உரிமையாளராக இருந்தார். அங்கு வாடிக்கையாளர்களுக்கு பாம்புகளிடமிருந்து விஷத்தை பிரித்தெடுக்கும் வேலையை செய்து வந்தார். பாம்புகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மித்ரிடாடிசம்(mithridatism) என்ற அணுகுமுறையைப் பயன்படுத்தவும் பில் முடிவு செய்தார். அது அவரை பாம்புக்கடியிலிருந்து பாதுகாத்துள்ளது. இது ஒரு குறிப்பிட்ட அளவிலான நோய் எதிர்ப்பு சக்தி அல்லது விஷ எதிர்ப்பை வளர்ப்பதற்காக அதிக அளவில் நச்சுத்தன்மையை உட்கொள்வதற்கான ஒரு நுட்பமாகும். 60 ஆண்டுகளுக்கும் மேலாக 32 வகையான பாம்புகளின் விஷத்தின் கலவையை தினமும் ஊசி மூலம் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொண்டதே அவரது பாம்பு விஷத்தை எதிர்க்கும் வெற்றியின் ரகசியம் என சொல்லப்படுகிறது.யானையைக் கொல்லும் அளவுக்கு விஷத்தை கக்கும் திறன் கொண்ட ஒரு பாம்பின் கடியில் இருந்து கூட அவர் உயிர் பிழைத்தார். ஒரு சாதாரண மனிதனுக்கு இந்த அபாயகரமான அனுபவங்கள் தவிர்க்க முடியாத மரணத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் வாழ்வில் 173 முறை கொடிய விஷமுள்ள பாம்பு கடியிலிருந்து தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமும் ஒரு கோப்பை தேநீர்

இன்றைய நவீன யுகத்தில் நொறுக்குத் தீனி காரணமாக உடல் பருமனாவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து பிளாக் டீ அல்லது கிரீன் டீ குடித்தால் உடல் பருமனாவதைத் தடுக்க முடியும். அதிக கொழுப்புச் சத்துள்ள உணவால் ரத்தத்தில் கலந்துள்ள, கொலஸ்ட்ரால், உயர் ரத்த குளுக்கோஸ் உள்ளிட்ட உடல் நலனை கெடுக்கும் பொருட்களையும் பிளாக் டீ வெளியேற்றி விடுகிறது. இரணாடம் வகை சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு காரணமாக உள்ள இன்சுலின் பாதிப்பையும் சரிசெய்ய இது உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தினமும் பிளாக் டீ குடியுங்கள் இது உங்கள் உடலில் உள்ள சர்க்கரை நோய் மற்றும் தேவையில்லாத கொழுப்புகளை கரைக்க உதவும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago