முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பறக்கும் கார்கள்

புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுக்களை கட்டுப்படுத்தும் விதத்திலும் விரைவில் பறக்கும் கார்கள் தயாராகவுள்ளது. ஜெனிவாவில் அதிநவீன வாகனங்களை அறிமுகப்படுத்தும் கண்காட்சியில் இடம்பெற்ற ‘பாப் அப் சிஸ்டம்’ (Pop.Up System) என்ற பெயர் கொண்ட பறக்கும் காரின் மாடல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சிறிய ரக காராக தோற்றமளிக்கும் இந்த ‘பாப் அப் சிஸ்டம்’ சுற்றுச்சூழலுக்கு மாசு உருவாகாத முறையில் பேட்டரியால் இயங்க கூடியது. கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த கார் ஓசையோ, புகையோ இல்லாமல் சாலையில் எழிலாக வழுக்கி செல்கிறது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் வேளையிலும், செல்ல வேண்டிய தூரத்தை மிக வேகமாக கடந்து செல்ல, ‘டுரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் இந்த காரை குட்டி விமானமாக மாற்றி, பறந்து செல்லலாம்.

புதிய டிரெண்ட்

எந்த விதமான உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகள் ஒருவரது உடல்நலத்திற்கும், ஃபிட்னெஸுக்கும் ஏற்றது என்பதைக் குறித்து, டிஎன்ஏ மூலமாக கண்டறியும் நிறுவனங்கள் தற்போது உள்ளன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் டிஎன்ஏ கிட் பரிசோதனை மேற்கொண்ட பின், நாம் உட்கொள்ளும் உணவு குறித்து தேர்ந்தெடுப்பதிலும், என்னென்ன பொருட்களை வாங்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்வதிலும், எந்த உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் நம் உடலுக்கு நன்மை பயக்கும் என்பதை எளிதில் அறியலாம். டிஎன்ஏ பரிசோதனை மூலம் கிடைக்கும் நன்மைகள் குறைவாக இருக்கிறது என்றும் எனினும், இதனால் கிடைக்கும் நன்மைகள் வணிக நோக்கில் அளவுக்கதிகமாகவும் மிகைப்படுத்துவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

வீட்டில் காற்றை சுத்திகரிப்பு செய்யும் 6 செடிகள்

இன்றைக்கு நகரங்களில் நம் வீட்டுக்குள்ளேயே சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாத நிலை வந்துவிட்டது. இதற்கு இயற்கையாகவே ஒரு தீர்வு இருக்கிறது, மரூள் (snake plant)-சிறந்த காற்று சுத்திகரிப்பு தாவரங்களில் ஒன்றான மருள், கார்பன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன் மோனாக்சைடு, ஃபார்மால்டிஹைடு, பென்சீன், சைலீன் மற்றும் ட்ரைக்ளோரெத்திலீன் உள்ளிட்ட குறைந்தது 107 அறியப்பட்ட காற்று மாசுபாடுகளை நீக்குகிறது. எந்தவொரு காலநிலையிலும் செழித்து வளரும். மணிபிளான்ட் (Money plant)-இது ஒரு சக்திவாய்ந்த காற்று சுத்திகரிப்பு தாவரமாகும், இது உங்கள் வீட்டிலுள்ள காற்றை மிகவும் திறம்பட சுத்தம் செய்யும், இலைகள் நச்சுத்தன்மை கொண்டவை என்பதால் குழந்தைகளிடம் கவனமாக இருக்க வேண்டும். பீஸ் லில்லி (Peace lily)-இது ஒரு சிறந்த காற்று சுத்திகரிப்பு தாவரம் ஆகும். இது ஃபர்னிச்சர், மின்னணுப் பொருள்கள் போன்றவற்றால் உருவாகும் தூசுகளையும் தன்னுடைய பெரிய இலைகளின் மூலம் உள்ளிழுத்துக் கொள்ளும். கற்றாழை (Aloevera)-சருமம் சார்ந்த பிரச்னைகளுக்குக் கற்றாழை தீர்வை தரவல்லது என்பது நம் மருத்துவத்தில் காலங்காலமாக இருக்கும் விஷயம். அதைத் தவிர்த்து காற்று சுத்திகரிப்பிலும் கற்றாழை முக்கியப்பங்கு வகிக்கிறது என்பது பலரும் அறியாத ஒன்று. இதை வீட்டில் வளர்த்தால் காற்றின் தரம் உயர்வதோடு, சிறந்த மூலிகையாகவும் நமக்கு கைகொடுக்கும். புதினா (Mint)-இதன் இலைகள் மிகவும் மணமுடையவை. இது வேகமாக வளரக்கூடியது. வீட்டில் இதை வளர்ப்பதன் மூலம் காற்றில் நல்லதொரு புத்துணர்ச்சி நீடித்திருக்கும். எலுமிச்சைப்புல் (Lemon grass)-இதில் சிட்ரல் (citral) என்னும் வேதிப்பொருள் உள்ளதால், மனச்சோர்வை நீக்கி உற்சாகம் தரக்கூடியதாகவும், காற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கக் கூடியதாகவும் உள்ளது. மேலும், கிருமிநாசினியாகவும் ஓர் இயற்கை கொசு விரட்டியாகவும் செயல்படுகிறது.

இந்தியாவுக்கு முதலிடம்

உலகம் முழுவதும் 32 கோடிக்கும் அதிகமான மக்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில்தான் அதிகளவு தற்கொலைகள் நடைபெறுவதாகவும் கடந்த 2005ம் ஆண்டு தொடங்கி, 2015ம் ஆண்டு வரையான காலத்தில், இந்திய அளவில் 5.66 கோடி தற்கொலைகள் நிகழ்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இவர்களில், 3 கோடி பேர் மன அழுத்தம்.

யானையா? மனிதனா? வலுக்கும் மோதல்

மாறி வரும் சூழல் காரணமாக பல் உயிர் பெருக்க சுழற்சி மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு புவி வெப்பமயதால், கார்பன் எமிசன் என பலக் காரணங்கள் சொல்லப்பட்டாலும் இயற்கையின் அழிவுக்கு மனிதனின் பேராசை மட்டுமே காரணமாக இருக்க முடியும். இதனால் தென்னிந்தியாவில் மிகப் பெரிய பல்லுயிர் பெருக்க வன வாழ்விடமான மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகள் மிகுந்த அபாயத்தை எதிர் கொண்டுள்ளன. இதற்கு முக்கிய உதாரணமாக யானைகளுக்கும் மனிதனுக்கு ஏற்பட்டுள்ள முரண்களை சூழலியாளர்கள் சுட்டி காட்டுகின்றனர். கடந்த 2019 வரை முந்தைய 5 ஆண்டுகளில் மட்டும் 2300க்கும் அதிகமான மக்கள் யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அரசு தகவல்கள் கூறுகின்றன. அதிலும் அதே கால கட்டத்தில் 500க்கும் மேற்பட்ட யானைகளும் உயிரிழந்துள்ளன. அதில் குறிப்பாக 333 யானைகள் மின்சாரம் தாக்கியும், சுமார் 100 யானைகள் வேட்டையாடப்பட்டும், விஷம் வைத்தும் கொல்லப்பட்டுள்ளன என்பது இதன் அவலத்தை நமக்கு தெளிவாக படம் பிடித்து காட்டுகின்றன.

தூக்கம் வர

தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இதோ ஒரு டிப்ஸ். உறங்குவதற்கு முன்பு ஒரு வாழைப்பழமும், வெதுவெதுப்பான பாலும் சாப்பிடுவது நல்ல உறக்கத்தை தரும், காரணம் உறக்கதிற்கான ஹார்மோன் மெலடோனின் மூலம் சிறந்து செயல்படுகிறது. மேலும், பாலில் இருக்கும் டிரிப்டோபென் ஆழ்ந்த உறக்கத்தை நமக்கு தருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago