முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

lightning, மின்னல்

பெரும்பாலும், மின்னல் தாக்குதலுக்கு பலியானவர்கள் மரங்களின் அடியில் தஞ்சம் புகுந்தவர்கள்தான். இது ‘சைட் ஃபிளாஷ்' என்று அழைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவருக்கு அருகில் ஒரு உயரமான பொருளை மின்னல் தாக்கும்போது, அங்கே இருக்கும் பாதிக்கப்பட்டவருக்கு தாக்குதல் பரவுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.  மின்னல் தாக்குதலினால் 2019 ஜூலை 25 முதல் 31 வரை அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும், அந்தக் காலகட்டத்தில் இந்தியா முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்னல் தாக்குதல்கள் நடந்ததாகவும் . வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சோட்டா நாக்பூர் பீடபூமி பகுதிகளில் அதிகப்படியாக மின்னல் தாக்குதல்கள் நடந்தன என்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டு குறிப்பு

ஐம்பது கிராம் கொல்லையும், ஐம்பது கிராம் புளியும், 300 மில்லி அளவு வெந்நீரில் இரவில் ஊறவைக்க வேண்டும். காலையில் கொதிக்க வைத்து 100 மில்லியாக வற்றச்செய்யவேண்டும். வற்றியதும் வடிகட்டி சிறிது சுக்கு, மரமஞ்சள் பொடிகளைச் சேர்க்க வேண்டும். அத்துடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் பருகினால்  பசி தூண்டப்படும், செரிமானம் அதிகரிக்கும்.

புதிய வசதி

கூகுள் மேப்பில் ஜி.பி.எஸ் மூலம், குரல் வழிகாட்டும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது கூகுள் மேப்பில் கேம்கள் விளையாடும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் மேப் மூலம் இப்போது 'சி' கேம் விளையாட முடியும். கூகுள் மேப்பில் உள்ள மஞ்சள் நிற குறியீட்டை தொட்டால், இந்த கூல் கேமின் திரை திறக்கும்.

உதவும் தொழில்நுட்பம்

வாட்ஸ் அப் செயலியில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் தீவிரவாதிகளின் தகவல் தொடர்புக்கு உதவுவதாக தெரியவந்துள்ளது. வாட்ஸ் அப் செயலி மூலம் அனுப்பப்படும் தகவல்கள் என்க்ரிப்டட் எனப்படும் தொழில்நுட்பம் மூலம் பாதுகாக்கப்படுவதால், தகவல்களை அனுப்புவர் மற்றும் பெறுபவர் தவிர வேறு யாரும் ஹேக் செய்ய முடியாது.

புரிதல் சுலபம்

ஜப்பானின் பேனாஸோனிக் கார்ப்பரேஷன் உருவாக்கி உள்ள புதிய மெகாபோன், பேசும் குரலை ஆங்கிலம், சீனம், கொரியா என பல மொழிகளில் இன்ஸ்டன்டாக மொழிபெயர்க்கிறது. 10 ஆயிரம் மெகாபோன்களை முதல்கட்டமாக தயாரித்துள்ள பேனாஸோனிக் நிறுவனம், அதனை 2018 ஆம் ஆண்டு சந்தைக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. ‘படிகளை கவனியுங்கள்’, ‘ரயில் தாமதமாக வருகிறது’ உள்ளிட்ட 300 ப்ரீசெட் வார்த்தைகளை துல்லியமாக 3 மொழிகளில் ஆட்டோமேடிக்காக மொழிபெயர்க்கும் திறன் கொண்டது இந்த மெகாபோன்.

சீனாவில் மம்மி கண்டுபிடிப்பு

மம்மி என்றாலே நம் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது எகிப்தும், அதன் பிரமிடுகளும்தான். அங்குதான் பண்டைய காலங்களில் உடலை பதப்படுத்தி மம்மிக்களாக பாதுகாத்து வந்துள்ளனர். ஆனால் அதிசயிக்கதக்க வகையில் சீனாவிலும் மம்மிகள் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 2011 ஆம் ஆண்டில் சீனாவின் தைஜோவில் சாலை தொழிலாளர்கள் ஒரு சாலையை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தபொழுது வித்தியாசமான ஒன்றை கண்டார்கள். உடனே தொல்பொருள் ஆய்வாளர்களிடம் சொல்ல அவர்கள் வந்து அகழ்வாராய்ச்சி செய்து பாக்க அவர்களுக்கு கிடைத்தது சவப்பெட்டியுடன் கூடிய ஒரு சிறிய கல்லறை. உள்ளே கிட்டத்தட்ட சரியாக பாதுகாக்கப்பட்ட சீன மம்மி ஒன்று இருந்தது. அப்படி அரிதான கலைப்பொக்கிஷமான சீன மம்மியை சாலை தொழிலாளர்கள்தான் கண்டுபிடிச்சிருக்காங்க என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago