முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உடல்நலம் காக்க

காலை, வெறும் வயிற்றில் சிட்ரஸ் பழங்கள், காரமான உணவுகள், வாழைப்பழம், பச்சை காய்கறிகள், தக்காளி, பேரிக்காய் போன்றவற்றை சாப்பிடக்கூடாது. சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு அல்சரையும், கார உணவுகள் மற்றும் பச்சை காய்கறிகள் நெஞ்செரிச்சலையும், வாழைப்பழம் இதய பிரச்சினையையும் ஏற்படுத்துமாம்.

இதற்குதான் அது

ஆப்பிள் ஐபோனில் கேமராவிற்கும், ப்ளாஸ்க்கும் நடுவே ஒரு துவாரம் இருக்கும். அது ரீசெட் பட்டன் இல்லை. அது மைக்ரோ போன். இவை தொழில்நுட்ப ரீதியான மைக்ரோபோன் இல்லை.இந்த மைக்ரோபோன் ஆடியோவில் வரும் தேவையற்ற இரைச்சல்களை நீக்கும் நாய்ஸ் கேன்சலிங் மைக்ரோ போன்.

ஜிபிஎஸ் இல்லாமலே

இன்றைய நவீன மனிதன் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் வரைபடங்கள், சாலை குறியீடுகள், திசைகாட்டிகள், ஜிபிஎஸ் கருவிகள் என ஏரானமானவற்றை நம்பி இருக்க வேண்டியுள்ளது. அப்படியும் சிலர் வழி தவறி விடுகின்றனர். ஆனால் எந்த வரைபடத்தையும் வைத்திருக்க முடியாத நீருக்கு அடியில், பல்லாயிரம் மைல்கள் ஆழமுள்ள கடலுக்குள்.. அதுவும் சூரிய ஒளி புகாத கும்மிருட்டில்.. ஆனால் சில சுறாக்கள் தங்கள் உடலிலேயே இயற்கை ஜிபிஎஸ் அல்லது காந்தமானியை கொண்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பல நூறு மைல்கள் சென்றாலும் மீண்டும் தனது இருப்பிடத்துக்கு மிகச் சரியாக அவை திரும்பி விடுகின்றனவாம்.  ஆய்வில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து கடலுக்கு அடியில் நீந்தி சுறாக்கள் மிகச் சரியாக ஆஸ்திரேலியா வந்து விட்டு 9 மாதங்களுக்கு பிறகு திரும்பிச் செல்வது தெரியவந்துள்ளது. இது இயற்கையின் ஆச்சரியம் தானே..

எல்.இ.டி ஸ்டிக்

மரத்தாலான ஸ்டிக் ஒன்றில் எல்.இ.டி கதிர்களை உமிழும் விளக்குகளைப் பொருத்தி காற்றில் படம் வரையும் அதிசயத்தை டிஐஒய் நெட்வொர்க் எனும் நிறுவனம். இந்தக் கருவிக்கு பிக்செல் ஸ்டிக் என்று பெயரிட்டுள்ளனர். பார்ப்பதற்கு மேஜிக் போல தெரிந்தாலும், தொழில்நுட்பத்தின் உதவியுடன் இது சாத்தியமாகியுள்ளது.

மிருதுவான பாதங்களுக்கு

பாதம் மிருதுவாக, மென்மையாக இருக்க லிஸ்டெரின் கால் கப் மவுத் வாஷ், வினிகர் சம அளவு எடுத்து கலந்து, ஒரு டப்பில் பாதம் நனையும் வரை சுடுநீரை நிரப்பி, பின் அதில் மவுத் வாஷ் கலவையை கலக்கி பாதத்தை மூழ்க வைக்க வேண்டும்.. 20 நிமிடம் கழித்து பாத்தை ஸ்க்ரப் செய்தால் பாதங்கள் மென்மையாக இருக்கும்.

இப்படியும் ஒரு ஆய்வு

சமூக வலைதளமான ஃபேஸ்புக்கை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து 5,208 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில், ஃபேஸ்புக்கில் சுயவிவரங்களை அடிக்கடி மாற்றுபவர்கள் மற்றும் அதில் அதிக நேரம் செலவழிப்பவர்கள், மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு கவலையில் இருப்பவர்களாம். இவர்கள் தான் ஃபேஸ்புக்கை அதிகம் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்