முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

வீட்டு வைத்தியம்

கடுக்காய், மாசிக்காய், சுக்கு, பூண்டு போன்றவை பல் வலி, ஈறுவீக்கம் பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. கடுக்காய் அற்புதமான மருந்தாக விளங்குகிறது. துவர்ப்பு சுவை நிறைந்த இது பற்களில் ஏற்படும் பிரச்னையை குணப்படுத்துகிறது. நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை போக்கும் தன்மை உடையது. சுக்கு பற்களில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்கிறது. மாசிக்காய் பொடி மிகுந்த துவர்ப்பு சுவை உடையது. பல் வலியை சரிசெய்ய கூடியது. பூண்டு, இந்துப்பு ஆகியவையும் பல் நோய்களுக்கு மருந்தாகிறது.

ரோபோ தொழில்நுட்பம்

நோயாளியின் தொண்டை பகுதியில் நுழைந்து அறுவை சிகிச்சை செய்யும் ரோபா நவீன கருவியை உருவாக்கியுள்ளனர். வளையத்தக்க தன்மை கொண்ட இந்த கருவி, குறைந்த அளவில் துளையிட்டு அறுவை சிகிச்சை செய்யவும் மற்றும் நுழையக்கூடிய முடியாத மிகவும் கடினமான மனிதனின் தொண்டை பகுதியில் நுழையும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கேமரா, ஒரு ஜாய்ஸ்டிக் பொருத்தப்பட்டுள்ளது.

சருமத்தின் வறட்சியை போக்க...

ஒரு துண்டு தர்பூசணி பழத்தை வாங்கி அதன் தசைப்பகுதியை எடுத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்றாக பூசுங்கள். பதினைந்து நிமிடங்கள் கழித்து இளஞ் சுடுநீரில் கழுவுங்கள். அதன் பின்பு குளிர்ந்த நீராலும் ஒருமுறை கழுவுங்கள். இது சருமத்தின் பொலிவுக்கு வழிவகுக்கும். தர்பூசணி பழக்கூழை இரண்டு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து, அதில் தயிர் கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவினால் சருமத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் நீங்கும். தயிருக்கு பதில் பாலும் சேர்த்துக்கொள்ளலாம். இத்துடன் இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்துக்கொண்டால் அது சிறந்த ஸ்கிரப் ஆக பயன்படும்.

ஒலிம்பிக்கில் கயிறு இழுக்கும் போட்டி

இன்றைக்கு எந்த ஒரு ஆண்டுவிழா, பள்ளி, கல்லூரி விழா என்றால் தவறாமல் இடம் பிடிக்கும் விளையாட்டுகளில் ஒன்றாக கயிறு இழுக்கும் போட்டி இடம் பெறும். இருந்தாலும் இதையெல்லாம் யாரும் விளையாட்டாக கூட மதிப்பதில்லை. ஆனால் ஒரு கால கட்டத்தில் இந்த போட்டிகள் ஒலிம்பிக்கில் இடம் பெற்றிருந்தன என்றால் ஆச்சரியம் தானே.. 1900 தொடங்கி 1920 வரையிலான காலகட்டத்தில் இந்த விளையாட்டும் ஒலிம்பிக்கில் இடம் பெற்றிருந்தது. அதன் பிறகு கயிறு இழுக்கும் போட்டி உள்பட 33 விளையாட்டுகளை ஒலிம்பிக்கில் இருந்து நீக்கப்பட்டன.

ஷூக்களின் நீளம் என்ன வென்று உங்களுக்கு தெரியுமா?

ஒரு கால கட்டத்தில் அதிகாரத்தின் குறியீடாகவும், செல்வந்தர்களின் அடையாளமாகவும் ஷூக்கள் அணியும் பழக்கம் நிலவி வந்தது நமக்கு தெரியும். பின்னர் போர் வீரர்களும், உயர் அதிகாரிகளும் அவற்றை அணிய தொடங்கினர். இன்றைக்கு விற்பனை பிரதி நிதி தொடங்கி அனைத்து தரப்பினரும் அணியும் பேஷன் பொருளாக ஷூ மாறியுள்ளது. மத்திய கால கட்டத்தில், அதாவது 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஷூக்கள் சுமார் 2 அடி நீளம் கொண்டவையாக தயாரிக்கப்பட்டன என்றால் ஆச்சரியம் தானே...இவை மென்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக கேசம், கம்பளி, இறகு போன்றவை திணிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டன. தற்போது இந்த வகை ஷூக்கள் விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகங்களில் மட்டுமே காணக்கிடைக்கின்றன.

நல்ல தோற்றத்திற்கு ...

உடல் ஆரோக்கியத்தில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்கம் இல்லாவிடில் உடல் நலக்குறைவு ஏற்படும். இந்த நிலையில் வழக்கத்தை விட குறைந்த நேரம் தூங்கினால் உடல் மட்டுமின்றி முக கவர்ச்சியும், வசீகரமும் குறையும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுவீடனில், 25 பேரை தேர்ந்தெடுத்து அவர்களிடம் 7.5 மணி நேரம் அயர்ந்து தூங்கும்படி வலியுறுத்தினர். அதன் பின்னர் முக அழகை போட்டோ எடுத்தனர். அதே போன்று 4 மணி நேரம் தூங்க வைத்து போட்டோ எடுக்கப்பட்டது. அவற்றில் குறைந்த நேரம் தூங்கிய போட்டோவில் முகம் பொலிவிழந்து கவர்ச்சி இன்றி காணப்பட்டது. இதன் மூலம் முகம் கவர்ச்சியுடன் திகழ அதிக நேரம் தூங்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago