முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சைவ உணவு சாப்பிடும் முதலை கேரளாவில் அதிசயம்

பொதுவாக சிறிய விலங்குகள், மீன்கள் ஆகியவற்றை வேட்டையாடி உண்ணும் வகையைச் சேர்ந்தவைதான் முதலைகள். ஆனால் வடக்கு கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீஅனந்தபுரம் கோவில் என்ற இடம். இங்குள்ள கோவிலில் ஸ்ரீஅனந்தபுரம் பத்மநாப சுவாமிகள் அருள் பாலிக்கிறார்.  அக்கோயிலில் உள்ள குளத்தில் வசிக்கும் முதலை தான் இப்போது ஹைலைட். அவர்தான் நம்ம வெஜிடேரியன் முதலை. பாபியா என அப்பகுதி மக்களால் செல்லமாக அழைக்கப்படும் இது சில வேளைகளில் கோயிலுக்கு உள்ளேயும் வந்து விடுவதுண்டு.  கோயிலில் சமைக்கும் உணவுதான் இந்த முதலைக்கும் வழங்கப்படுகிறது.  இது எப்போது வந்தது என்று யாருக்கும் தெரியாது. கோயில் குருக்கள் அதற்கு கோயில் யானைக்கு கொடுப்பது மாதிரி சாதாரணமாக உணவை படைக்கிறார். நமக்கு படியளக்கும் பகவான்தான் அதற்கும் படியளக்கிறார் எனக் கூறும் குருக்கள், அந்த முதலை இதுவைர யாரையும் தாக்கியதில்லை என்கிறார். சாதுவான பூனை போல கோயில் பிரகாரத்தில் வலம் வருகிறார் முதலையார். 

ஆயுளை கூட்ட

நாம் தினமும் விரும்பிச் செய்யும் உடற்பயிற்சியை செய்வதற்கு முன்பும், செய்த பின்னும் ஸ்டிரெச்சிங் பயிற்சிசெய்வது மிகவும் முக்கியமானது. இதை தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் செய்வதால், உடல் ரப்பர் போல வளைந்து கொடுத்து புத்துணர்ச்சி அடையச் செய்து, நம் ஆயுளையும் 10 ஆண்டுகள் ஆரோக்கியத்தோடு கூட்டுகிறதாம்.

சிலைகளின் நகரம் எது தெரியுமா?

கேரள மாநிலத்தில் அதிகமான சிலைகளை கொண்டுள்ள நகரம் எது என்று தெரியுமா.. அந்த மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் தான் அதிகமான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. 150 ஆண்டுகளுக்கு முன்பு தலைமை செயலகம் முன்பு வைக்கப்பட்ட மாதவராவ் என்பவரின் சிலையில் தொடங்கி தற்போது வரை 40க்கும் மேற்பட்ட இடங்களில் தலைவர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே இதற்கு சிலைகளின் நகரம் என்ற செல்லப் பெயரும் உண்டு

புது முயற்சி

பலமுறை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட பால்கான் 9 என்ற ராக்கெட் விண்ணுக்குச் சென்று மீண்டும் பூமிக்குத் திரும்பி வந்திருக்கிறது. உரிய மாற்றங்களைச் செய்து இதை மீண்டும் பயன்படுத்த முடியும். இந்த வகையில் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியிருப்பது, வரலாற்றில் இதுவே முதன் முறை.

உலகில் முதன்முதலில் வைர சுரங்கம்

இன்றைக்கு உலகின் பல்வேறு இடங்களில் உள்ள சுரங்கங்களிலிருந்து வைரம் தோண்டி எடுக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. ஆனால் பண்டைய காலத்திலேயே இந்தியா வைரத்தின் மதிப்பை உணர்ந்திருந்தது. இந்தியாவில் தான் முதன் முதலில் வைர சுரங்கங்கள் காணப்பட்டன.  கிருஷ்ணா, கோதாவரி நதி படுகைகளில் உள்ள வண்டல் படுகைகளில் வைரம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அங்குதான் வைரம் தோண்டி எடுக்கப்பட்டது. உலகின் மிகப் பெரிய வைரங்களில் ஒன்றாக இன்றும் இந்தியாவில் கிடைத்தவைதான் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் உள்ள கோஹினூர் வைரம் இந்தியாவில் இருந்து எடுக்கப்பட்ட மிகவும் பிரபலமான வைரமாகும்.

மூளையில் பிராசஸர்

மனிதர்களுக்கு ஏற்படும் பக்கவாத நோயை எதிர்கொள்ள சிறிய ரக பிராசஸர்களை மனித மூளையில் பொறுத்தி மூட்டு பகுதிகளை கட்டுப்படுத்தி இயக்குவது சார்ந்த ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வில் மூளையில் இருந்து வரும் கட்டளைகள் நோயாளியின் முதுகெலும்பில் பொறுத்தப்பட்டுள்ள மின்சாதன ஸ்டிமுலேட்டர்களுக்கு அனுப்பப்படும் முன், நியூரோ சிக்னல்கள் டீகோடு செய்யப்பட்டு டிஜிட்டைஸ் செய்து பிராசஸ் செய்யப்படும். பின் நோயாளி தனது கை மூலம் தொடும் பொருட்களை உணர மூளைக்கு தகவல்கள் வேறு விதமாக அனுப்பப்படும். கார்டக்ஸ் - எம்.ஒ எனும் சிறிய ரக பிராசஸரை பயன்படுத்தி இந்த ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ளவுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago