முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தேநீர் விருந்து மூலம் திருமண சடங்கு

கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவின் எல்லையில் ரஷ்யா, ஈரான், ஆர்மீனியா, ஜார்ஜியா மற்றும் காஸ்பியன் கடல் இடையே அஜர்பைஜான் நாடு அமைந்துள்ளது. பெண்களுக்கு உரிமை வழங்கிய முதல் முஸ்லிம் நாடு. 1918 ஆம் ஆண்டில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் முஸ்லீம் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது. இன்றுவரை ஆண் பெண் சமத்துவ முஸ்லிம் நாடுகளில் ஒன்றாக இருந்துவருகிறது. இங்கு திருமணம் நிச்சயம் வித்தியாசமாக தேநீர் கோப்பை மூலமாக நடத்தப்படுகிறது. திருமண நிச்சயம் செய்ய கூடியிருக்கும் பொழுது தேனீர் கோப்பைகள் சர்க்கரை இல்லாமல் பரிமாறப்பட்டால் திருமணம் இன்னும் நிச்சயம் செய்யப்படவில்லை என அர்த்தம். தேனீர் கோப்பையில் தேநீர் இனிப்பு சேர்த்து கொடுக்கப்பட்டால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது என அர்த்தம். அஜர்பைஜானின் தேசிய விலங்கு கராபக் குதிரை. இது உலகின் பழமையான இனங்களில் ஒன்றாகும். அஜர்பைஜானில் குதிரை இறைச்சி ஒரு காலத்தில் பரவலாக உண்ணப்பட்டது. ஆனால் இப்போது அதற்கு பதிலாக மெனுவில் ஆட்டுக்குட்டி மற்றும் மாட்டிறைச்சியைக் காணலாம்.

டிஜிட்டல் மாத்திரை

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணிகளுக்கு இன்ஜெஸ்டிபுள் சென்சார் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘டிஜிட்டல் மாத்திரைகள்’ வழங்கப்படவுள்ளன. இந்த மாத்திரை பயணிகளின் வயிற்றில் உள்ள அமிலத்தன்மை, பயணிகளின் தூக்கம் முறை, உடலின் வெப்பநிலை மற்றும் இதய துடிப்பு போன்ற தகவல்களை வழங்குகிறது. இதன்மூலம் பயணிகளின் உடல்நிலை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளமுடிகிறது.

செல்ல பிராணிகள்

நாய்கள் மனித உடலில் உள்ள கரிம சேர்மங்களின் (organic compounds) வாசனையை வைத்து மனித உடல் சரியாக வேலை செய்யவில்லை என கண்டுபிடிக்கும் சக்தி உள்ளது என ஜெர்மனியில் உள்ள ஒரு ஆய்வில் கண்டுபிடித்துள்ளது.உண்மையில் நாய்களுக்கு மனிதனின் புற்று நோயை கண்டறிய முடியும். அத்துடன் விஞ்ஞானிகள் நாய்களை வைத்து நீரிழிவு மற்றும் வலிப்பு நோய்களையும் கண்டறிய முடியுமா என முயற்சி மேற்கொண்டுள்ளனர். இரு ஆச்சரியமான விஷயம் என்ன வென்றால் மனிதர்களுக்கு கைரேகை போல் நாய்க்கு மூக்கில் உள்ள ரேகை ஒவ்வொரு நாய்க்கும் வித்தியாசமாக இருக்கும். மனிதர்களை போலவே நாய்களும் கனவு காணும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!