முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்

கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கணேஷ் நகரைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி, கட்டிட ஒப்பந்ததாரர். தனது வீட்டில் கிட்டியம்மாள் என்ற பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அந்த நாய் போட்ட 6 குட்டிகளை அவர் தனது நண்பர்களுக்கு கொடுத்து விட்டார். இதற்கிடையே, தென்காசி அருகே உள்ள மேலப்பாவூரில் உள்ள பெருமாள்சாமியின் மூத்த மகள் இலக்கியா வீட்டில் உள்ள ஆடு ஒன்று, 4 குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு குட்டியை இலக்கியா, தனது தந்தை பெருமாள்சாமியிடம் கொடுத்துள்ளார். கருப்பாயி என்ற பெயருடன் அந்த ஆட்டுக்குட்டி அவரது வீட்டில் வளர்ந்து வருகிறது. அந்த ஆட்டுக்குட்டி வீட்டிற்கு வந்தது முதல், நாயும் பாசத்துடன் பழகியுள்ளது. ஆட்டுக்குட்டிக்கு பசி எடுக்கும் போதெல்லாம், நாய் பாசத்துடன் பால் கொடுத்து வருவதைப் பார்த்த பெருமாள்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆச்சரியப்பட்டனர். இது சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியதால் அந்த காட்சியை அந்த பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.

பன்முகம் கொண்ட நாடு

உலக நாடுகள் இந்தியாவை பார்த்து வியக்க காரணங்கள் பல உள்ளன. யுனெஸ்கோ அறிவித்துள்ள பாரம்பரிய இடங்களில் இந்தியாவில் மட்டும் 32 உள்ளன. உலகின் உயரமான இடத்தில் (14,567 அடி உயரத்தில்) அமைந்திருக்கும் தபால் நிலையம் ஹிக்கிமில் (Hikkim)இருக்கிறது.  உலகிலேயே மக்கள் அதிகமாக கூடும் திருவிழா கும்பமேளா. கடந்த 2013-ம் ஆண்டு நடந்த கும்பமேளாவில் 55 நாட்களில் பத்து கோடி பேர் திரண்டனராம். உலகிலேயே அதிகமாக மழைப்பொழிவு பெறும் இடம் மேகாலயா. மாவ்சின்ராம் எனும் கிராமத்தில் ஒரு ஆண்டிற்கு 467 இன்ச் அளவு மழை பொழிகிறது. இங்கிருந்து பத்து மையில் தூரம் தொலைவில் உள்ள சிரபுஞ்சி 2-வது இடத்தில் இருக்கிறது. உலகிலேயே அதிகமாக ஆங்கிலம் பேசும் மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் நமது நாடு 2-ம் இடத்தில் உள்ளது.

வீட்டில் பிரியாணி இலையை எரித்தால் என்ன நடக்கும் தெரியுமா?

பிரியாணி இலையை எரித்த பிறகு, அதிலிருந்து வெளிவரும் புகை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தினமும் வீட்டில் 1-2 பிரியாணி இலையை எரித்தால், காற்று சுத்தமாவதோடு, மனநிலையும் சிறப்பாக இருக்கும். பிரியாணி இலையில் உள்ள யூஜெனோல் மற்றும் மைர்சீன் என்ற இரண்டு சேர்மங்கள் உள்ளன. இவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. எனவே பிரியாணி இலைகளை எரித்த பிறகு, அதன் வாசனை மூளையின் நரம்புகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, டென்சனை நீக்குகிறது.  பிரியாணி இலையில் லினாலூல் என்னும் தனித்துவமான பொருள் உள்ளது. இது மன அழுத்தத்தைக் குறைக்கக்கூடியது. ஆகவே நீங்கள் ஒருவித மன அழுத்தத்தால் இருப்பது போன்று உணர்ந்தால், உங்கள் படுக்கையறையில் 2 பிரியாணி இலையை எரியச் செய்து அதன் வாசனை (சற்று தொலைவில் இருந்துதான்) நுகருங்கள். மிக சிறந்த காற்று நறுமணமூட்டியாகவும் இது செயல்படுகிறது. ஒரு கலத்தில் 2-3 நன்கு உலர்ந்த பிரியாணி இலையை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அறையின் ஜன்னல் மற்றும் வாசல் கதவுகளை மூடுங்கள். பிரியாணி இலையில் நெருப்பை மூட்டிவிட்டு, அறையை மூடிவிட்டு வெளியே வந்துவிட வேண்டும். 10 நிமிடம் கழித்து, அந்த அறைக்குள் சென்று, ஆழமாக சுவாசியுங்கள். இப்படி ஒரு 5-7 முறை அந்த அறைக்குள் சென்று வாருங்கள். நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள்.

ஹைபர்சோனிக் விமானம்

அதிவேகமாக செல்லக்கூடிய பயணிகள் விமானத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.  இதற்கு "ஹைபர்சோனிக் விமானம்" என பெயரிட்டுள்ளனர். இதன் வெளிப்பாகம் செராமிக், கடினமான ரசாயன கலவைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. உலகத்தின் அதிவேகமான விமானமாக கருதப்படும் மிக்-25-ன் அதிகப்படியான வேகம் 3 ஆயிரத்து 200. இந்த வேகத்தை காட்டிலும், இருமடங்கு வேகத்தில் செல்லும் அளவிற்கு இந்த புதிய ரக பயணிகள் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  3 ஆயிரம் டிகிரி வரை இந்த விமானம் தட்பவெட்பத்தை தாங்கும். இந்த விமானத்தின் மூலமாக லண்டனிலிருந்து நியூயார்க் நகரத்திற்கு 2 மணி நேரத்திற்குள் செல்ல முடியுமம்.

சந்திரனிலும் நிலநடுக்கம் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?

சந்திரனிலும் நிலநடுக்கம் ஏற்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? நம்முடைய பூமியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நமக்கு தெரியும். இதனால் அடிக்கடி ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படும். நம்முடைய பூமியைப் போலவே சந்திரனிலும் நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது. 1969 மற்றும் 1972 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சந்திரனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் அப்பல்லோ விண்வெளி வீரர்கள் அவர்கள் ஆய்வு செய்யும் இடங்களை சுற்றி நில அதிர்வு அளவீடுகளை நிறுவினார்கள். இந்த ஆய்வில் சந்திரனில் நிலநடுக்கம் இருபதிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தூரத்திற்குள் ரிக்டர் அளவில் 5.5 வரை பதிவானது. சந்திரனில் 700 கிலோ மீட்டர் வரைக்கும் ஆழத்தில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிளிகளைப் போல மிமிக்ரி செய்யும் பேபி சீல்கள்

தங்களது குரல்களை நேரத்துக்கு தக்கபடி மாற்றிக் கொள்ளும் பாலூட்டி விலங்கினங்களில் சீல்களும் ஒன்று. இவை பனி படர்ந்த துருவ பிரதேசங்களில் வாழ்பவை. அண்மையில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் குட்டி சீல்கள் தங்களது குரல்களை மாற்றிக் கொண்டு மனிதர்களைப் போலவும், கிளிகளைப் போலவும் சத்தம் எழுப்புவதை கண்டறிந்துள்ளனர். அவை தங்களது ஒரிஜினல் குரலை மாற்றி, மனிதர்களைப் போல, கிளிகளைப் போல மிமிக்ரி செய்வதாக அவர்கள் கூறுகின்றனர். தங்களது குரல்களை ஏற்ற இறக்கத்துடன் மாற்றத் தெரிந்த பாலூட்டி இனங்களில் சீல்களும் தற்போது இணைந்துள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். நெதர்லாந்தில் உள்ள Max Planck Institute for Psycholinguistics என்ற ஆய்வகம்தான் தற்போது இந்த ஆய்வை கண்டறிந்துள்ளது. இதற்காக 1 முதல் 3 வாரங்கள் வரையிலான வயதுடைய 8 பேபி சீல்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அதன் குரல்களை தொடர்ந்து பதிவு செய்து ஆய்வு செய்ததில் இவை தெரியவந்துள்ளது. உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்டுள்ள Wadden Sea பகுதியில்தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago