முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

சூரியனுக்கு விழா

தமிழகத்தில் தஞ்சை, ஒடிசாவில் கோனார்க் பகுதியில் சூரிய கோவில் உள்ளது. இதுதவிர, கேரளா, ஜம்மு காஷ்மீர், குவாலியர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரிலும் இந்த கோவில்கள் அமைந்துள்ளது. சூரிய தேவன் இடம் பெயர்வதை குறிக்கும்  விழாவாக மகர சங்கராந்தி வட மாநிலங்களில் பொங்கல் நேரத்தில் கொண்டாடப்படுகிறது.

3 டன் எடை கொண்டது

சீனாவில் டைனோசர் காலத்தில் வாழ்ந்த ராட்சத பறவையின் புதைப்படிவம் ஒன்று கனான் என்ற பகுதியில் கிடைத்துள்ளது. படிமத்தின் அளவை வைத்துப் பார்க்கும்போது, இந்த பறவை 3 ஆயிரம் கிலோ எடையும், 8 மீட்டர் உயரமும் இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். இந்தப் பறவைக்கு பெய்பிலாங் என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் பறவை மிகப்பெரிய பெரிய அளவில் கூடுகட்டி வாழ்ந்திருக்கலாம். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் 40 செ.மீ. உயரம், 5 கிலோ எடை கொண்ட ராட்சத பழங்கால முட்டைகளின் படிமங்கள் ஏராளமான கிடைத்தன. அந்த முட்டைகள் இந்த பறவையினத்தின் முட்டைகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த பறவைகள் 9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

செயற்கையால் ஆபத்து

ஆப்பிள்கள் சீக்கிரம் கெடாமல் இருக்கு இயற்கையாகவே மெழுகுப் பூச்சு இருக்கும். ஆனால், தற்போது செயற்கையாக பூசப்படும் மெழுகில் சேர்க்கப்படும் நைட்ரேட், ‘நைட்ரைஸோ மார்போலின்’ என்ற ரசாயனத்தை உருவாக்குகிறது. இது கேன்சர் நோய்க்கான முக்கிய காரணியாக இருக்கிறது. எனவே கவனமாக இருக்க வேண்டும்.

உணவை செரிக்க 4 வாரம் எடுத்துக் கொள்ளும் விலங்கு எது தெரியுமா?

உலகிலேயே சோம்பேறியான விலங்கு என்று அழைக்கப்படுவது ஸ்லாத் எனப்படும் ஒரு வகை சிறிய கரடி இனமாகும். அசையாக்கரடி (sloth) தென் அமெரிக்காவிலே வாழும் இரவிலே இரைதேடும் ஒரு விலங்கு. இது ஒரு தாவர உண்ணி என்றும், பூச்சி, பல்லி முத்லியவற்றையும் உண்ணும் என்பதால் அனைத்துண்ணி விலங்கு என்றும் கூறப்படுகின்றது. இது நெடுநேரம் அசையாமலே இருக்கும் என்பதாலும், மிக மிக மெதுவாகவே நகரும் என்பதாலும் இதனை "அசையா"க் கரடி என்கிறோம். இந்த கரடிதான் தான் சாப்பிட்ட உணவை செரிப்பதற்கும் சோம்பேறித்தனமாக இருக்கும். இது உண்ட உணவு உடலில் செரிமானம் ஆக 2 முதல் 4 வார காலம் வரை ஆகும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கோகோ-விற்கு மாற்று.

‘கோகோ’ வில் இருந்து சாக்லேட் தயாரிக்கப்படுகிறது. அதற்காக சர்வதேச அளவில் 45 லட்சம் டன் கோகோ தேவைப்படுகிறது. ஆனால் விவசாயிகளால் அந்த அளவு கோகோ சாகுபடி செய்ய முடியவில்லை. 37 லட்சம் டன் மட்டுமே சாகுபடி செய்கின்றனர். இதற்கு மாற்று வழியை கண்டுபிடிக்க பிரேசிலில் உள்ள சாவ் பாவ்லோ பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், பலாக் கொட்டையில் இருந்து சாக்லேட் தயாரிக்க முடியும் என கண்டறிந்துள்ளனர். பலாக் கொட்டையில் சாக்லேட்டின் நறுமணம் மற்றும் சுவையுடன் கூடிய ஒரு பொருள் மறைந்து இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதில் இருந்து சாக்லேட் தயாரிக்க பயன்படும் பொருள் உருவாக்க முடியும். இதன் மூலம் கோகோ பற்றாக்குறையால் சாக்லேட் தயாரிப்பில் ஏற்படும் பாதிப்பை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

7 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு

வரலாற்றில் முதன் முறையாக பூமி அளவில் இருக்கும் ஏழு கோள்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியில் இருந்து 39 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் இந்த கோள்களில் மனிதர்கள் வாழ சாத்தியம் என்றே தற்போது வரை கிடைத்திருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளது.  இவற்றில் நீர் மற்றும் வாழக்கூடிய தன்மைகள் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என மூத்த ஆராய்ச்சியாளர் மைக்கேல் கில்லான் தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே வாணியல் ஆரய்ச்சியாளர்கள் ஏழு கோள்களை கண்டுபிடித்துள்ளனர். எனினும் அவை அனைத்தும் பூமி அளவில் இருக்கவில்லை இதனால் பூமி அளவு கொண்ட 7 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. அனைத்து கோள்களும் ஒரே சுற்றுப் பாதையில் பயணிப்பதால் இவற்றின் ஒரு பகுதியில் நீர் இருப்பதற்கான சாத்தியம் அதிகம் என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago