முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

செல்போனை கண்டுபிடித்தவர் யார் தெரியுமா

தொலைபேசியை கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்றைக்கு அனைவரின் கைகளிலும் தவழும் செல்போனை கண்டுபிடித்தவர்கள் யார் தெரியுமா...மோட்டரோலா நிறுவனத்தின் ஜான் எப் மிட்சல், மார்ட்டின் கூப்பர் ஆகிய இருவரும் சேர்ந்து முதல் கம்பி்யில்லா ரேடியோ ஒலி அலைகள் மூலம் செயல்படும் செல்போனை 1973ம் ஆண்டு தயாரித்தனர். அதன்மூலம் கம்பியில்லா செல்போன் தொழில் நுட்பத்துக்கு வழிவகுத்தனர். அவர்கள் பயன்படுத்திய செல்போன் 2 கிலோ எடையுடன் இருந்தது. பின்னர் 1983 முதல் எடை குறைவான செல்போன்கள் விற்பனைக்கு வரத்தொடங்கின.

மேற்கத்திய திருமணங்களில் வெள்ளை ஆடை மரபு எப்போது தோன்றியது

நம்மூர் திருமணங்களில் பட்டு சேலையும், பட்டு சரிகை வேட்டியும் உடுத்துவதை மரபாக கொண்டுள்ளோம். ஆனால் மேற்கத்திய திருமணங்களின் போது வெள்ளை நிற உடையில் மணமக்கள் தேவதை போல் காட்சியளிப்பர். இந்த மரபு முதன் முதலில் பிரான்ஸில் தான் தோன்றியது. 1499 இல் 12 ஆம் லூயிக்கும், அன்னாவுக்கும் நடைபெற்ற திருமணத்தின் போதுதான் முதன் முதலில் வெள்ளை ஆடை அணியும் பழக்கம் ஏற்பட்டது. இருந்த போதிலும், 1840 இல் விக்டோரியா மகாராணிக்கும் இளவரசர் ஆல்பர்ட்டுக்கும் நடைபெற்ற திருமணத்துக்கு பிறகுதான் வெள்ளை ஆடை மரபு தொடர்ந்து பொது மக்களிடமும் நீடித்து நிலைத்தது.

டிவியில் தெரியும் உணவின் சுவையை நாவால் வருடி உணரும் புதிய ஸ்கிரீன்

தொலைக்காட்சிப் பெட்டியின் திரையில் தோன்றும் உணவுப் பொருட்களை, நாவால் சுவைக்கும் விதத்தில் ஒரு புதிய திரையை ஜப்பானைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.ஜப்பானைச் சேர்ந்த பேராசிரியர் ஹோமி மியாஷிடா என்பவர்தான் இந்த கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர். இதன் மூலம் டிவியில் தோன்றும் உணவு பொருள்களின் சுவையை டிவியின் மீது ஒட்டப்பட்டுள்ள ஒரு வகை பிலிம் மூலம் கண்டு பிடிக்க முடியும். அதை நாவால் வருடுவதன் மூலம் டிவியில் தோன்றும் உணவுப் பொருளின் சுவை தெரியும் என்கிறார். இதை தயாரிக்க இந்திய மதிப்பில் ரூ.65 ஆயிரம் வரை செலவாகும் என்கிறார். இதன் மூலம் தொலைவில் செய்யப்படும் டிஷ்களின் டேஸ்டை நம் டிவிலேயே நாவால் ருசிக்கலாம் என்றால் ஆச்சரியம் தானே..

L1-விசா

அமெரிக்காவில் தற்காலிகமாக பணிபுரிவோருக்கு வழங்கப்படுவது எச்1 பி விசா. இந்த விசா ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் அதிக எண்ணிக்கையில் எச்1பி விசாக்களை வழங்குகிறது. எச்1பி விசாக்களை வைத்திருப்போரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவதுதான் L1 விசா.

அதிசய மனிதன்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முசாபர் நகரை சேர்ந்த நரேஷ்குமாரை மின்சார மனிதன் என அழைக்கிறார்கள். பசி எடுத்தால் பல்புகளை எரிய விட்டு அதன் ஒயர்களை தனது வாயில் வைத்து கொள்கிறார். இப்படி நரேஷ்குமார் 30 நிமிடங்கள் செய்தால் அவரின் பசி அடங்கி விடுகிறதாம். மேலும், தனக்கு அபூர்வ சக்தி உள்ளது என நரேஷ் நம்ப தொடங்கியுள்ளார்.

வாலிபரின் அசூர வளர்ச்சி

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த சண்முகராவ் என்ற 24 வயது வாலிபர் சிறுவயது முதலே உயரமாக வளரத் தொடங்கினார். இதனால் அவரது வளர்ச்சி தொடர்பாக பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. நீங்கள் உயரமாக இருப்பதால் மகனும் உயரமாக வளரலாம் என்று அக்கம் பக்கத்தினர் கூறினர். இப்போது 24 வயதான நிலையில் சண்முகராவ் 8 அடி 3 அங்குலம் வளர்ந்து விட்டார். அவர் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போகிறார். இதனால் அவரது பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். சண்முகராவ் 10-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். பள்ளியில் அவரை எல்லோரும் ஏணி என்று கேலி செய்தனர். இதனால் அவர் படிப்பை நிறுத்திக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்