Idhayam Matrimony

சென்னை மழை பாதிப்பு குறித்து களத்தில் துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 2 டிசம்பர் 2025      தமிழகம்
DCM 2025-09-02

Source: provided

சென்னை : கனமழை தொடர்பாக சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அவர் பாதிப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

சென்னை அருகே வங்கக்கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 12 மணி நேரம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு கடற்கரையை நோக்கி மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் தற்போது நகர்கிறது. கடற்கரை நோக்கி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று இரவு சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தது. இதன் காரணமாக சென்னையில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் மழையின் தாக்கம் மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். கனமழை தொடர்பாக சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழை நீரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். அப்போது மழை நீர் தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், நீர் தேங்கிய பகுதிகளில் உள்ள நீரை உடனே வெளியேற்றவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து