எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டெல்லி : பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து இந்தியா கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி தகவல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. பின்னர், இரு தரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தைக்குப்பின் மோதல் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், இந்திய கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளதாக அவர் கூறினார். இது தொடர்பாக தினேஷ் திரிபாதி கூறியதாவது, பாகிஸ்தான் கடற்படை அதன் துறைமுகங்களிலேயே நிற்குமாறு இந்திய கடற்படை வலிமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. பாகிஸ்தானுக்கு எதிரான மோதலை தொடர்ந்து கடந்த 8 மாதங்களாக எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் கடற்படை தயார் நிலையிலேயே உள்ளது. ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையின் போர் கப்பல்கள் பாகிஸ்தான் கடற்படையை அதன் துறைமுகங்கள் மற்றும் அதன் கடற்கரை பகுதிகளிலேயே நிறுத்தின. ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது. என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


