எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
அகத்திக்கீரை சாம்பார்
Cooking time in minutes:
30
Ingredients:
அகத்திக்கீரை சாம்பார் செய்யத் தேவையான பொருள்கள்;
- அகத்திக்கீரை - 1 கட்டு.
- துவரம் பருப்பு - 100 கிராம்.
- பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் - 20.
- பொடியாக நறுக்கிய தக்காளி - 1.
- எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்.
- கடுகு,உளுந்து - 1/2 ஸ்பூன்.
- கறிவேப்பிலை - 5.
- மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்.
- சீரகதூள் - ஸ்பூன்.
- சோம்பு தூள் - ஸ்பூன்.
- மிளகாய்தூள் - 2 ஸ்பூன்.
- மல்லித்தூள் - 1 ஸ்பூன்.
- பெருங்காயதூள் - 1 சிட்டிகை.
- புளி - சிறிதளவு.
- தேங்காய் - 1/2 மூடி.
- உப்பு - தேவையான அளவு.
Method:
செய்முறை ;
- 1/2 மூடிதேங்காய்யை துருவி தேங்காய் துருவலை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தை எடுத்து சிறிதளவு புளியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து ஒரு கப் புளிக்கரைசலை தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் குக்கரை வைத்து 100 கிராம் துவரம் பருப்புயை போட்டு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி பருப்பை வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து நன்கு காய்ந்த உடன் 5 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானவுடன் 1/2 ஸ்பூன் கடுகு,உளுந்து, 5 கருவேப்பிள்ளை,பொடியாக நறுக்கிய 20 சின்னவெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி மற்றும் சுத்தம் செய்த ஒரு கட்டு அகத்திக்கீரையை போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்,ஒரு ஸ்பூன் சீரகதூள், ஒரு ஸ்பூன் சோம்பு தூள் 2 ஸ்பூன் மிளகாய்தூள், ஒரு ஸ்பூன் மல்லித்தூள்,ஒரு சிட்டிகை பெருங்காயதூள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு கடாயை மூடி கீரையை நன்றாக வேக விடவும்.
- தயார் செய்து வைத்துள்ள ஒரு கப் புளிக்கரைசலை ஊற்றி கலந்து விடவும்.
- குக்கரில் வேக வைத்த பருப்புயை போட்டு கலந்து விட்டு கடாயை மூடி சாம்பாரை சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.
- மிக்சி ஜாரில் அரைத்து வைத்த 1/2 கப் தேங்காய் விழுதை போட்டு கலந்து விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான அகத்திக்கீரை சாம்பார் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
வார ராசிபலன்
01 Feb 2026


