முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகங்கை மாவட்டத்தில் இன்று அரசு சார்பில் விழா: 2,560 கோடி ரூபாய் மதிப்பிலான 49 முடிவடைந்த திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2026      தமிழகம்
Stalin 2024-12-04

சென்னை, சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று ரூ. 13.36 கோடியில் 28 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ. 2,559.50 கோடியில் 49 முடிவடைந்த திட்டப்பணிகளையும் அவர் திறந்து வைக்கிறார். மேலும் விழாவில் 15,453 பயனாளிகளுக்கு ரூ. 205.06 கோடியிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் அவா் வழங்குகிறார். இதைத்தொடர்ந்து, காரைக்குடி கழனிவாசல் பகுதியில் ரூ. 32 கோடியில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காவை முதல்வர் திறந்துவைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 நாட்கள் ஆய்வு...

2 நாட்கள் கள ஆய்வுப் பணிகளுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை  மாவட்டத்திற்கு சென்றார். சென்னையில் இருந்து தனி விமானத்தில் நேற்று மதுரை வந்த முதல்வர் மாலை 5 மணிக்கு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயல்புதூரில் சுதந்திர போராட்டத்தின்போது மகாத்மா காந்தியடிகள், ஜீவா ஆகியோர் சந்தித்த இடத்தில் கட்டப்பட்ட நினைவு மண்டபத்தை திறந்து வைத்தார். 

முடியரசனார் சிலை....

தொடர்ந்து இரவு 7.15 மணிக்கு காரைக்குடி அருகே குன்றக்குடியில் உள்ள குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து இரவு 8 மணிக்கு  பின்னர், காரைக்குடி கழனிவாசல் பகுதியில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருச்சி பைபாஸ் சாலையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் அருகே ரூ. 50 லட்சத்தில் நிறுவப்பட்ட வீறுகவியரசர் முடியரசனார் சிலையை திறந்து வைத்தார். பின்னர் இரவு 8.30 மணிக்கு காரைக்குடி அழகப்பா அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார்.

சட்டக்கல்லூரி திறப்பு...

இதனைத் தொடர்ந்து முதல்வர் இன்று காலை காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பேரூராட்சியில் ரூ. 61.78 கோடியில் கட்டப்பட்ட செட்டிநாடு வேளாண்மைக் கல்லூரி கட்டடத்தையும், கழனிவாசல் பகுதியில் ரூ. 100.45 கோடியில் கட்டப்பட்ட சட்டக்கல்லூரி கட்டிடத்தையும் திறந்துவைக்கிறார்.

பல்வேறு திட்ட உதவிகள்...

இதைத்தொடர்ந்து நடைபெறும் விழாவில் ரூ. 13.36 கோடியில் 28 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ. 2,559.50 கோடியில் 49 முடிவடைந்த திட்டப்பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். விழாவில் 15,453 பயனாளிகளுக்கு ரூ. 205.06 கோடியிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் அவா் வழங்குகிறார். இதைத்தொடர்ந்து, காரைக்குடி கழனிவாசல் பகுதியில் ரூ. 32 கோடியில் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காவை முதல்வர் திறந்துவைக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரோன்கள் பறக்க... 

முன்னதாக சிவங்கைக்கு வருகை புரிந்த முதல்வருக்கு சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் சிவகங்கை மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வரின் வருகையையொட்டி 2 நாட்கள் சிவகங்கை மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க போலீசார் தடை விதித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து