முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜக. - அ.தி.மு.க. துரோக கூட்டணி: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது: சென்னையில் நடந்த கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2026      தமிழகம்
CM-2-2026-01-30

சென்னை, இந்தியாவிலேயே யாரும் அடைய முடியாத 11.19 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சியை, திராவிட மாடல் ஆட்சியில் சாத்தியப்படுத்தியிருக்கிறோம். இந்த வளர்ச்சியை நாங்கள் சாதாரணமாக அடைந்துவிடவில்லை. சமூகத்தில் எந்தவொரு பிரிவும் விடுபட்டுவிடக் கூடாது என்று, மிகவும் கவனமாக பார்த்துப் பார்த்து திட்டங்களை உருவாக்கியிருக்கிறோம்.

ஒருபக்கம், ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து ஏற்படுத்தி வரும் அரசியல் நெருக்கடிகள் எல்லாவற்றையும் எதிர்கொண்டு, மறுபக்கம் தொலைநோக்குப் பார்வையுடன் எதிர்காலத்திற்துக்கான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். தேவைகளுக்கு ஏற்ப, எங்களின் கொள்கைகளும் “Evolve” ஆகி வருகிறது.

சென்னை கிண்டியில் நடைபெற்ற கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: தி.மு.க.வின் மீது வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதாவது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளதா? பா.ஜ.க.வின் பக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள் தான். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் ஊழல்வாதிகள் வெளுக்கப்பட்டு விட்டனரா? இந்தி திணிப்பை ஏற்காததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்வி நிதி எப்போது வரும்? களத்தில் எங்களை எதிர்க்க முடியாதவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு தான் வாரிசு அரசியல்.

ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டவர்களுடன் தான் பா.ஜ.க. கூட்டணி வைத்துள்ளது. கட்டாயத்தில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது. அது துரோகக்கூட்டணி.

சமூகநீதி - சமத்துவம் - மக்கள் நலன் ஆகியவற்றை தி.மு.க. அரசு முக்கியமாக பார்க்கிறது. தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைந்துள்ளது. மத்திய அரசின் நெருக்கடிகளை தாண்டி திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். தமிழ்நாட்டில் 3-ம் நிலை நகரங்கள் கூட வளர்ச்சி அடைந்துள்ளன. சமூகத்தில் எந்த பிரிவினரும் விடுபட்டு விடக்கூடாது என பார்த்து பார்த்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். மாநிலத்தின் உள்கட்டமைப்பை வலிமைப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்தியாவில் எந்த மாநிலமும் அடைய முடியாத 11.8% வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்கட்டமைப்பு மேம்படுத்தி உள்ளது திராவிட மாடல் அரசு. இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தொடங்க வேண்டும். நாட்டிலேயே முதல்முறையாக காலை உணவு திட்டத்தை தமிழ்நாடு செயல்படுத்தி வருகிறது. தி.மு.க. வெற்றி பெற்ற மறுநாளே விடியல் பயண திட்டத்தை தொடங்கி வைத்தோம். சொன்னதை போலவே மகளிர் உரிமை தொகை திட்டத்தை நிறைவேற்றி காட்டியிருக்கிறோம்.  தி.மு.க. ஆட்சியில் 4,000 கோவில்களில் குடமுழுக்கு செய்துள்ளோம். இது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கூட இல்லாத சாதனை. நாட்டுக்கே வழிகாட்டி திராவிட மாடல் ஆட்சி என்பதற்கான அடையாளம் மற்ற மாநிலங்களில் நம் திட்டங்களை பின்பற்றுவதுதான். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து