முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பண்ருட்டி சம்பவம் எதிரொலி: தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2026      தமிழகம்
EPS 2020 11-16

சென்னை,  “தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், மாளிகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(67). இவா், வியாழக்கிழமை மாலை சுமாா் 6.30 மணி அளவில் மாளிகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கந்தன் (38) என்பவரின் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறிச் சென்றாா். இவா்கள் பிள்ளையாா்குப்பத்தில் இருந்து மாளிகம்பட்டு நோக்கிச் சென்றனா். அப்போது, அந்த வழியாக வேகமாக காா் ஒன்று வந்ததாம். அதைப் பாா்த்தவுடன் கந்தன், முதியவா் ராஜேந்திரனை கீழே இறக்கிவிட்டு, இருசக்கர வாகனத்தையும் நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாராம்.

கந்தன் ஓடுவதை பாா்த்துக்கொண்டிருந்த ராஜேந்திரன் மீது காரில் வந்த நபா் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றாராம். இதில், ராஜேந்திரன் பலத்த தீக்காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மருத்துவா்கள் ராஜேந்திரனுக்கு முதலுதவிச் சிகிச்சை அளித்து தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் குறித்து காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், “தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் பக்க பதிவில், "கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன்(67). இவா், வியாழக்கிழமை மாலை சுமாா் 6.30 மணி அளவில் மாளிகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கந்தன் (38) என்பவரின் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டுசென்றார். 

அப்போது அந்த வழியாக வேகமாக காரில் வந்த மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு, ராஜேந்திரன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றாராம். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தபடியே ராஜேந்திரன் சாலையில் ஓடிய காட்சி தமிழக மக்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கான பயங்கர சாட்சி. நாள்தோறும் "இன்னும் என்ன கொடுமை நடக்கப் போகிறதோ?" என்ற அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கும் மேலாக சட்டம் - ஒழுங்கு சீர்கெட முடியாது" என்று நினைக்கும் ஒவ்வொரு தருணத்திலும், அதைவிடக் கொடூரமான சம்பவங்கள் இந்த தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல; தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான். இந்த கொடூர கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து