முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

அருகம்புல் பாயாசம்

Cooking time in minutes: 
20
Ingredients: 

அருகம்புல் பாயாசம் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. அருகம்புல் - ஒரு கப்.
  2. கசகசா - ஒரு டீஸ்பூன்.
  3. பசும்பால் - 1/2 லிட்டர். 
  4. நெய் - 2 டீஸ்பூன்.
  5. மஞ்சள் திராட்சை - 25.
  6. முந்திரி பருப்பு - 10.
  7. கருப்பு திராட்சை - 25.
  8. பொடியாக நறுக்கிய பேரிச்சம்பழம் - 3. 
  9. நாட்டு சர்க்கரை - 1/2 கப். 
  10. கலர் பொடி - சிறிதளவு.
  11. ஏலக்காய் -2.
  12. பச்சைக்கற்பூரம் - சிறிதளவு.
  13. குங்குமப்பூ - சிறிதளவு.
Method: 

செய்முறை ;

  1. ஒரு மிக்சி ஜாரில் சுத்தம் செய்த ஒரு கப் அருகம்புல் மற்றும் ஒரு டீஸ்பூன் கசகசாவை போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1/2 லிட்டர் பசும்பாலை ஊற்றி,பால் கெட்டியாக வரும் வரை நன்றாக காய்ச்சி வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றவும்,நெய் சூடானவுடன், 25 மஞ்சள் திராட்சையை போட்டு வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கிடாய் வைத்து 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றவும்,நெய் சூடானவுடன், 10 முந்திரி  பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  5. அடுப்பில் கிடாய் வைத்து 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றவும்,நெய் சூடானவுடன்,25 கருப்பு  திராட்சை மற்றும் பொடியாக நறுக்கிய 3 பேரிச்சம்பழத்தை போட்டு  வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  6. அடுப்பில் கிடாய் வைத்து காய்ச்சி வைத்துள்ள பசும்பாலை சிறிதளவு ஊற்றவும்.
  7. இதனுடன் மிக்சியில அரைத்து வைத்துள்ள அருகம்புல்சாறை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
  8. இதனுடன் 1/2 கப் நாட்டு சர்க்கரை,ஏலக்காய பொடி, சிறிதளவு கலர் பொடி ஆகியவற்றை போட்டு கலந்து விடவும்.
  9. இதனுடன் தனித்தனியாக நெய்யில் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு,மஞ்சள் திராட்சை,கருப்பு திராட்சை,பேரிச்சம் பழம் ஆகியவற்றை போட்டு கலந்து விடவும்.
  10. இதனுடன் மீதம் உள்ள பசும்பாலை ஊற்றி,சிறிதளவு பச்சைக்கற்பூரம் மற்றும் சிறிதளவு குங்குமப்பூவை போட்டு கலந்து விடவும்.
  11. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  12. சுவையான அருகம்புல் பாயாசம் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago