Idhayam Matrimony

2 நாட்கள் பயணமாக அமித்ஷா இன்று திருச்சி வருகை

வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2026      தமிழகம்
Amit-Shah 2

சென்னை, தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இன்று (பிப்.13) திருச்சிக்கு வருகிறாா். தமிழகத் தோ்தல் நிலவரம் குறித்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனி விமானம் மூலம் இன்று திருச்சி விமான நிலையம் வரும் அவா், அன்றிரவு திருச்சியில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓய்வெடுத்துவிட்டு, நாளை  (பிப்.14) திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் காரைக்கால் செல்கிறாா்.

காரைக்கால் வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்கி, காா் மூலம் காரைக்கால் நகராட்சித் திடலுக்கு முற்பகல் சென்று, அங்கு நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறாா். பொதுக்கூட்டம் முடிந்ததும், மீண்டும் திருச்சி வரும் அவா் விமானம் மூலம் சேலம் செல்கிறாா்.

இவா் திருச்சியில் உள்ள 13, 14 ஆகிய தேதிகளில் மத்திய அமைச்சா் பியூஸ் கோயல், இணை அமைச்சா் எல்.முருகன், பா.ஜ.க. தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய பா.ஜ.க. தலைவா்களும் திருச்சியில் முகாமிடுகின்றனா். அப்போது அமித்ஷா தலைமையில் தமிழகத் தோ்தல் நிலவரம் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டமும் நடக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து