Idhayam Matrimony

சென்னையில் ரூ.96.04 கோடியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2026      தமிழகம்
CM-2-2026-02-12

சென்னை, சென்னையில் ரூ.96.04 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், புதிய பாலத்திற்கு அருகில் ரூ.1.10 கோடியில் அமைக்கப்படவுள்ள பூங்காவிற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று (12.02.2026) பெருநகர சென்னை மாநகராட்சியின் தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட கொருக்குப்பேட்டை, மணலி சாலையில் ரெயில்வே 2பி சந்திக்கடவில் 96.04 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். 

மேலும், கொருக்குப்பேட்டை, எண்ணூர் நெடுஞ்சாலையில் ரெயில்வே 2ஏ சந்திக்கடவில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள மேம்பாலம் மற்றும் தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டை மணலி சாலையில் புதிய பாலத்திற்கு அருகில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பூங்கா ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த கொருக்குப்பேட்டை, மணலி சாலை மற்றும் எண்ணூர் நெடுஞ்சாலையில் உள்ள ரெயில்வே 2பி மற்றும் 2ஏ சந்திக்கடவுகளில் தொடர் இடைவெளிகளில் ரெயில் போக்குவரத்துக்கு ஏதுவாக சுமார் 42 ஆயிரம் வாகனங்களின் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் இவ்விரு சந்திக்கடவுகளையும் கனரக வாகனங்களும் பொதுமக்களும் கடப்பதற்கு காலதாமதமாகிறது.

இதன் காரணமாக இப்பகுதி மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கையினை நிறைவேற்றி, பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையிலும், காலநேரம் மற்றும் எரிபொருள் சேமிப்பை கருத்திற்கொண்டும் மேற்படி சந்திக்கடவுகளுக்கு மாற்றாக மணலி சாலை மற்றும் எண்ணூர் நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் 2022-23ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், கொருக்குப்பேட்டையில் உள்ள மணலி சாலையில் 2பி ரெயில்வே சந்திக்கடவில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டை, மணலி சாலையில் ரெயில்வே 2பி சந்திக்கடவில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் 96.04 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரால் நேற்று மக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்து, வாகனத்தில் பயணம் செய்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து