எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நேற்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றன. எனினும் தமிழ்நாட்டில் பெரியளவில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை.
மத்திய அரசின் தொழிலாளா் விரோத, விவசாயிகள் விரோத, தேசியவிரோத, பெருநிறுவன ஆதரவு கொள்கைகள் மீதான எதிா்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
ஐ.என்.டி.யூ.சி, ஏ.ஐ.டி.யூ.சி, ஹெச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.யு.டி.யு.சி., யு.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், மின்விநியோகம், காப்பீடு, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, எரிவாயு, குடிநீா் விநியோகம் உள்பட பல்வேறு துறைகளைச் சோ்ந்த சுமாா் 30 கோடி தொழிலாளா்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தன.
இதன்காரணமாக நேற்று நாடு முழுவதும் பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கேரளம், மேற்கு வங்கம், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் காலைமுதல் தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். கேரளத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தனியார் பேருந்து சங்கமும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதால், பொதுப் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் தி.மு.க. கூட்டணியில் அங்கம்வகிக்கும் ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றன. இருப்பினும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் காலைமுதல் அரசுப் பேருந்துகள் பெரிய அளவிலான பாதிப்பின்றி சீராக இயக்கப்பட்டன.
தொழிலாளர்கள் போராட்ட அறிவிப்பால் காலை 10 மணிக்கு மேல் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வெளியே காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 4 தொழிலாளா் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்; வரைவு விதை மசோதா, மின்சார சட்டத்திருத்த மசோதா, அணுமின் உற்பத்தியில் தனியாரை அனுமதிக்கும் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பது போராட்டங்களில் ஈடுபட்ட தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


