முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

குடைமிளகாய் பருப்பு மஸ்ரூன்

Cooking time in minutes: 
20
Ingredients: 

குடைமிளகாய் பருப்பு மஸ்ரூன் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. பொடியா நறுக்கிய குடைமிளகாய் - 1.  
  2. காளான் - 1/4 கிலோ.
  3. கடலை பருப்பு - 100 கிராம்.
  4. கிராம்பு - 2.
  5. நெய் - 2 டீஸ்பூன்.
  6. பிரியாணி இலை - 2.
  7. மஞ்சள்தூள் - 1/2  டீஸ்பூன்.
  8. பொடியா நறுக்கிய பெரிய வெங்காயம் - 2.
  9. பொடியா நறுக்கிய  தக்காளி - 2.
  10. பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை,மல்லி  இலை - சிறிதளவு.
  11. இஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்.
  12. மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்.
  13. மல்லித்தூள் - 2 டீஸ்பூன்.
  14. கரம்மசாலா - 1 டீஸ்பூன்.
  15. டோமோட்டோ சாஸ் - 1 டீஸ்பூன்.
  16. சில்லிசாஸ் -1 டீஸ்பூன்.
  17. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;

  1. அடுப்பில் குக்கரை வைத்து 100 கிராம் கடலை பருப்பு, 2 கிராம்பு,1 டீஸ்பூன் நெய்,1/2  டீஸ்பூன் மஞ்சள்தூள்,2 பிரியாணி இலையை போட்டு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி பருப்பை 3 விசில் வரும் வரை நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாய் வைத்து  எண்ணெய்யை ஊற்றவும்,
  3. எண்ணெய் சூடானவுடன் பொடியா நறுக்கிய 2 பெரிய வெங்காயத்த போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  4. இதனுடன் பொடியா நறுக்கிய 2 தக்காளி,பொடியா நறுக்கிய 1 குடைமிளகாய்,பொடியாக நறுக்கிய சிறிதளவு கறிவேப்பிலை மல்லி, நறுக்கிய 1/4 கிலோ காளான்,1 ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கவும்.
  5. இதனுடன்  2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 2 டீஸ்பூன் மல்லித்தூள், 1 டீஸ்பூன் கரம்மசாலா,1 டீஸ்பூன் டோமோட்டோ சாஸ், 1 டீஸ்பூன் சில்லிசாஸ்  மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு 5 நிமிடம் மூடி போட்டு மூடி வேக விடவும்.
  6. 5 நிமிடம் கழித்து முடியை திறந்து குக்கரில் வேக வைத்த பருப்பை போட்டு உடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி கலந்து விடவும்.
  7. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  8. சிறிதளவு பொடியாக நறுக்கிய  மல்லியை தூவி பரிமாறவும்.
  9. சுவையான குடைமிளகாய் பருப்பு மஸ்ரூன் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 3 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 2 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 3 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago