முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கோழி வறுவல்

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

கோழி வறுவல் செய்யத் தேவையான பொருள்கள்; 

  1. சிக்கன் லெக் பீஸ் - 3,
  2. கான்பளார் மாவு -20 கிராம்.
  3. மைதா மாவு - 20 கிராம்.
  4. சில்லி பேஸ்ட் - 20 கிராம்.
  5. பிரட் தூள் -100 கிராம்.
  6. இஞ்சி பூண்டு பேஸ்ட்  - 50 கிராம்.
  7. பூண்டு - 20 கிராம்.
  8. இஞ்சி - 20 கிராம்.
  9. வெள்ளை மிளகுப்பொடி - 10 கிராம்
  10. சோயா சாஸ் 10 கிராம்.
  11. சின்ன வெங்காயம் 20 கிராம்.
  12. பச்சை மிளகாய் - 2.
  13. முந்திரி பருப்பு - 50 கிராம்.
  14. சூரியகாந்தி எண்ணெய்  - 250 கிராம்.
  15. உப்பு - தேவையான அளவு.
  16. எலுமிச்சம் பழம் -1.

 

Method: 

 

செய்முறை ; 

  1. ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த 3 சிக்கன் லைக் பீஸை எடுத்துக்கொள்ளவும்.
  2. ஒரு கத்தியை எடுத்து சிக்கன் லைக் பீஸை கீறி விடவும்
  3. இஞ்சி,பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் போடவும்.
  4. பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு ஸ்பூன் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு ஒரு ஸ்பூன் போடவும்.
  5. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒரு ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒரு ஸ்பூன்,வெள்ளை மிளகுப்பொடி 10 கிராம்,சோயா சாஸ் 10 கிராம், சில்லி பேஸ்ட் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழசாறு சிறிதளவு, மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கலந்துகொள்ளவும்.
  6. இதனுடன் மைதா மாவு 20 கிராம், கான்பளார் மாவு 20 கிராம் போட்டு  சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
  7. 30 நிமிடம் கழித்து 100 கிராம் பிரட் தூளில் சிக்கனை போட்டு பிரட் தூள்கள்,சிக்கனின் அணைத்து பகுதியிலும் ஓட்டும் படி அப்பி விட வேண்டும்.
  8. இதே போல் மூன்று சிக்கன் லெக் பீஸையும் தயார் செய்துகொள்ளவும்.
  9. அடுப்பில் கடாய் வைத்து சூரியகாந்தி எண்ணெய் 250 கிராம் ற்றவும்.
  10. எண்ணெய் சூடானவுடன் மசால் தடவி ஊற வைத்த மூன்று சிக்கன் லெக் பீஸையும் ஒவ்வென்றாக போட்டு குறைவான தீயில் பொரிக்கவும்.
  11. திருப்பி போட்டு பொரிக்கவும்.
  12. நன்றாக பொரிந்து விட்டது இதை ஒரு தட்டில் எடுத்துக்கொள்ளவும்.
  13. மிதமான சூட்டில் பொரித்து எடுத்த 50 கிராம் முந்திரி பருப்பை எடுத்து சிக்கனில் தூவி விடவும்.
  14. சுவையான கோழி வறுவல் ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்