முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிங்கப்பூர் சிக்கன்

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

சிங்கப்பூர் சிக்கன் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. எலும்பு இல்லாத  சிக்கன் 200 கிராம்.
  2. பொடியாக நறுக்கிய பூண்டு - 3  டீஸ்பூன்.
  3. பொடியாக நறுக்கிய இஞ்சி - 2  டீஸ்பூன்.
  4. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2  டீஸ்பூன்.
  5. வெள்ளை மிளகு த் தூள் - தேவையான அளவு.
  6. சர்க்கரை - தேவையான அளவு.
  7. மைதா மாவு  - 100 கிராம்.
  8. சோள மாவு - 50 கிராம்.
  9. தக்காளி சாஸ் – 2 ஸ்பூன்.
  10. எயிட் அன் எயிட் சாஸ் – 1 ஸ்பூன்.
  11. சில்லி பேஸ்ட் – 1 ஸ்பூன்.
  12. சோயா சாஸ்   – 1 ஸ்பூன்.
  13. அண்ணாச்சிபழம் - 6 துண்டுகள்.
  14. ஆப்பிள்  - 6 துண்டுகள்.
  15. குத்தக்கூடிய குச்சிகள் – 6.
  16. ரீபைண்ட் ஆயில்- 100  மில்லி.
  17. வெங்காதாள்கள்  - தேவையான அளவு.
  18. உப்பு -  தேவையான அளவு .

 

Method: 

செய்முறை ;

  1. ஒரு பாத்திரத்தில் எலும்பு இல்லாத  சிக்கன் 200 கிராம், உப்பு  தேவையான அளவு ,வெள்ளை மிளகு தேவையான அளவு,மைதா ஒரு ஸ்பூன்,சோள மாவு ஒரு ஸ்பூன்,பொடியாக நறுக்கிய பூண்டு  ஒரு  டீஸ்பூன்,பொடியாக நறுக்கிய இஞ்சி 1  டீஸ்பூன்,அண்ணாச்சிபழம் 6 துண்டுகள்,ஆப்பிள் 6 துண்டுகள்,சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கலந்து தயார் செய்துகொள்ளவும்.
  2. குத்தக்கூடிய குச்சிகளை எடுத்து முதலில் ஆப்பிள்பழத்துண்டை சொருகி அடுத்ததாக சிக்கன் துண்டை சொருகி பின்னர் அண்ணாச்சிபழத்துண்டை சொருகவும்.
  3. இதே போல் எல்லாவற்றையும்  தயார் செய்துகொள்ளவும்.
  4. அடுப்பில் கடாய் வைத்து 100 மில்லி ரீபைண்ட் ஆயில்  ஊற்றவும்.
  5. எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை ஒவ்வென்றாக போட்டு பொரிக்கவும்.
  6. திருப்பி திருப்பி போட்டு நன்றாக வறுக்கவும்.
  7. நன்றாக பொரிந்து விட்டது எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்
  8. அடுப்பில் கடாய் வைத்து ரீபைன்ட் ஆயில் 2 ஸ்பூன் உற்ற வேண்டும்.
  9. எண்ணெய் சூடானவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 ஸ்பூன் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  10. பொடியாக நறுக்கிய பூண்டு 2  டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு  டீஸ்பூன்,தக்காளி சாஸ்,2 ஸ்பூன்,எயிட் அன் எயிட் சாஸ் ஒரு ஸ்பூன்,சில்லி பேஸ்ட் ஒரு ஸ்பூன், சர்க்கரை சிறிதளவு,சோயா சாஸ் ஒரு ஸ்பூன், மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு குறைவான தணலில் 5 நிமிடம் வேக விட்டு சாஸை தயார் செய்து கொள்ளவும்.
  11. பொறித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சாஸில் போட்டு, சிறிதளவு வெள்ளை மிளகுத் தூள், மற்றும்  தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விடவும்.
  12. பொடியாக நறுக்கிய வெங்காத்தாள்ள் சிறிதளவு தூவி விட்டு  இறக்கவும்.
  13. சுவையான சிங்கப்பூர் சிக்கன் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்