முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பீட்ரூட் தோசை

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

பீட்ரூட் தோசை செய்யத் தேவையான பொருள்கள்;

  1. இட்லி அரிசி - 200 கிராம்.
  2. பீட்ருட் - 120 கிராம்.
  3. துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்.
  4. பூண்டு - 6 பல்.
  5. மிளகாய் வத்தல் - 2.
  6. சீரகம் - 1 டீஸ்பூன்.
  7. எண்ணெய் - 2 ஸ்பூன்.
  8. உப்பு - தேவையான அளவு.
  9. வெங்காயம் -1.
  10. கொத்தமல்லி - சிறிதளவு.
Method: 

 

செய்முறை ;-

  1. ஒரு பாத்திரத்தில் 200 கிராம் இட்லி அரிசியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் உற வைக்கவும்.
  2. பூண்டு 6 பல், மிளகாய் வத்தல் 2, சீரகம் 1 டீஸ்பூன், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை மிக்சியில் போட்டு அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. மிக்சியில் உற வைத்த 200 கிராம் இட்லி அரிசியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
  4. இதனுடன் பீட்ருட் 120 கிராம்,துருவிய தேங்காய் 2 ஸ்பூன் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  5. மிக்சியில் அரைத்து  வைத்த சீரகம்,மிளகாய் வத்தல்,பூண்டு விழுதை போட்டு ரவா தோசைக்கு அரைப்பது  போல் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  6. அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.
  7. ஒரு மணி நேரம் கழித்து மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒன்றையும்,சிறிதளவு கொத்தமல்லியையும் போட்டு கலந்து விடவும்.
  8. இப்போது பீட்ரூட் தோசை செய்ய மாவு ரெடி.
  9. அடுப்பில் தோசை தவாவை வைத்து நன்கு சூடு படுத்தவும்.
  10. தவா காய்ந்ததும் சிறிதளவு மாவை எடுத்து ஊற்றவும்
  11. சிறிது எண்ணெய் ஊற்றவும்.முன்னும்,பின்னும் நன்கு வேக வைக்க வேண்டும்.  நல்லா வெந்திருச்சி எடுத்துலராம்.
  12. சுவையான பீட்ரூட் தோசை ரெடி. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்