முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மட்டன் ஸ்டூ

Cooking time in minutes: 
45
Ingredients: 

 

மட்டன் ஸ்டூ செய்யத் தேவையான பொருள்கள்;

  1. மட்டன் – 1/2 கிலோ.
  2. சின்ன வெங்காயம் - 100 கிராம்.
  3. தக்காளி -1.
  4. பச்சை மிளகாய் – 4.
  5. இஞ்சி - 1 துண்டு.
  6. பூண்டு - 4 பல்.
  7. தேங்காய்  1/2 மூடி.
  8. உருளை கிழங்கு - 1.
  9. கறிவேப்பிலை,கொத்தமல்லி – சிறிதளவு.
  10. நல்லெண்னை - 100 மில்லி.
  11. உப்பு - தேவையான அளவு.
  12. காய்ந்த மிளகாய் -2.
  13. சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்.
  14. சோம்பு- 1 டேபிள் ஸ்பூன்.
  15. நெய் - 50 மில்லி.
  16. பட்டை – 2.
  17. கிராம்பு – 5.
  18. ஏலக்காய் – 5.
  19. முந்திரி பருப்பு 50 கிராம்.
  20. அன்னாசிப்பூ – 4.
  21. சாதி பத்ரி -4.
Method: 

 

செய்முறை ;

  1. மிக்சி  ஜாரில் சிறிதளவு முந்திரி பருப்பு,பொடியாக நறுக்கிய தேங்காய் சிறிதளவு,பூண்டு 2 பல், சீரகம் சிறிதளவு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் குக்கர் வைத்து சுத்தம் செய்த மட்டன் 1/2 கிலோ, சின்ன வெங்காயம் சிறிதளவு, பொடியாக நறுக்கிய இஞ்சி சிறிதளவு,பொடியாக நறுக்கிய பூண்டு சிறிதளவு, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு,2 விசில் வரும் வரை குக்கரை முடி வேக விடவும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து நல்லெண்ணை 100 மில்லி ஊற்றவும்.
  4. எண்ணெய் சூடானவுடன் சோம்பு,பட்டை,கிராம்பு,அன்னாசிப்பூ,சாதிபத்ரி, ஏலக்காய்,பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு சிறிதளவு,கறிவேப்பிலை சிறிதளவு, உப்பு சிறிதளவு, மற்றும் சின்ன வெங்காயம் 100 கிராம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  5. இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய் 4, பொடியாக நறுக்கிய ஒரு உருளை கிழங்கு, பொடியாக நறுக்கிய தக்காளி, சிறிதளவு முந்திரி பருப்பு வேக வைத்த 1/2 கிலோ மட்டன் மற்றும் வேக வைத்த நீர் சிறிதளவு ஊற்றி கலந்துவிட்டு 5 நிமிடம் வேக விடவும்.
  6. அரைத்து வைத்துள்ள தேங்காய்,முந்திரி விழுதை ஊற்றி கிளறி விட்டு 3 நிமிடம் வேக விடவும்.
  7. 50 மில்லி நெய்,காய்ந்த மிளகாய் 2,கறிவேப்பிலை,கொத்தமல்லி சிறிதளவு தூவி இறக்கவும்.
  8. சுவையான மட்டன் ஸ்டூ ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்