முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'பிரதமர் பள்ளிக் கூடங்கள்' திட்டத்தில் இணைகிறது கேரளா: அமைச்சர் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2025      இந்தியா
Kerala-Assembly

Source: provided

திருவனந்தபுரம் : பிரதமர் பள்ளிக் கூடங்கள் திட்டத்தில் இணைய இருப்பதாக கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் ஒன்று கேரளா. இயற்கை பேரிடர், மத்திய அரசு ஒதுக்கும் நிதி ஆகியவற்றில் ஓரவஞ்சனை செய்யப்படுவதாக கேரள மாநில அரசு, மத்திய அரசை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. சர்போன்றவற்றில் மத்திய அரசுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு நிலையை கொண்டு வருகிறது. மத்திய அரசின் கல்வி திட்டங்களையும் ஏற்றதில்லை.

இந்த நிலையில் பிரதமர் திட்டத்தில் இணைய இருப்பதாக, கேரள மாநில பொது கல்வித்துறை அமைச்சர் வி. சிவன்குட்டி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நிதியை பெறுவதற்கு நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தகுதியானவர். இதனால் கேரளா இதில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டிய தேவையில்லை. கேரள அரசின் பல்வேறு கல்வி திட்டங்களுக்காக மத்திய அரசு 1466 கோடி ரூபாய் வழங்காமல் இருக்கிறது. கேரள மாநில குழந்தைகள் இந்த நிதியை பெற தகுதியானவர்கள்.

நிலுவையில் உள்ள நிதியை பெறுவதற்காக மட்டுமே இந்த திட்டத்தில் இணைகிறோம். கேரளாவில் உள்ள கல்விக் கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது. நிதியை பெற்றால் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்த முடியும். 7 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சுமூகமாக சம்பளம் வழங்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.

எழுச்சி இந்தியாவுக்கான பிரதமர் பள்ளிக் கூடங்கள் திட்டம் என்பது நாடு முழுவதும் உள்ள சில குறிப்பிட்ட பள்ளிகளை மேம்படுத்தும் முயற்சியாகும். இந்தியா முழுவதும் உள்ள 14,500 பள்ளிகளை இந்த திட்டத்தின் கீழ் மேம்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து