Idhayam Matrimony

போராட்டக்காரர்கள் மீது வீசப்பட்ட கழிவுகள்: ட்ரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 அக்டோபர் 2025      உலகம்
Trump-2025-10-19

நியூயார்க், அமெரிக்காவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது விமானத்தில் இருந்து கழிவுகளை வீசி அவமானப்படுத்துவது போல அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்யறிவு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிராக மியாமி, லாஸ் ஏஞ்சலீஸ், நியூயார்க், வாஷிங்டன், சிகாக்கோ உள்பட பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நியூயார்க்கின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு, இது மன்னராட்சி அல்ல, அரசர் யாரும் இல்லை பதாகைகளுடன் போராட்டத்தில் இறங்கினர்.

சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக 70 லட்சத்துக்கு அதிகமான மக்கள் வீதிகளில் இறங்கி முழக்கம் எழுப்பினர். குடியேற்றவாசிகளுக்கு எதிராக அடக்குமுறைகள்,அரசு துறைகளில் மேற்கொள்ளப்படும் பணி நீக்கங்கள், பொருளாதார கொள்கைகள் ஆகியவை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்யறிவால் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், அரசர் ட்ரம்ப் என்று குறிப்பிடப்பட்டுள்ள போர் விமானத்தில் விமானியாக அரசர் போல கிரீடம் அணிந்து உட்கார்ந்திருக்கும் டொனால்ட் ட்ரம்ப், போராட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது கழிவுகளை வீசுகிறார். அப்போது டேஞ்சர் ஜோன் என்ற பாடலும் ஒலிபரப்பாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து