Idhayam Matrimony
முகப்பு

மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜாம்

Cooking time in minutes: 
20
Ingredients: 
மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜாம் செய்யத் தேவையான பொருட்கள்.
  1. பப்பாளிப்பழம் -1.
  2. கொய்யாப்பழம் - 2.
  3. நாட்டு வாழைப்பழம் -4.
  4. சர்க்கரை - 1/2 கிலோ.
  5. எலுமிச்சம் பழம் -1
  6. சிகப்பு கலர் பொடி - ஒரு சிட்டிகை. (தேவையெனில்)
Method: 

செய்முறை ;--

  1. நன்கு பழுத்த ஒரு பப்பாளிப்பழம் மற்றும் 2 கொய்யாப்பழத்தை எடுத்து சுத்தம் செய்து தோல் மற்றும் விதைகளை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பப்பாளிபழம் 200 கிராம் மற்றும் 100 கிராம் கொய்யாப்பழத்தை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. 4 நாட்டு வாழைப்பழத்தை எடுத்து தோலை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 200 கிராம் வாழைப்பழத்தை மட்டும் பப்பாளிபழம் மற்றும் கொய்யாப்பழம் உள்ள பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொள்ளவும். 
  3. அடுப்பில் கடாய் வைத்து,கடாய் சூடானவுடன் நறுக்கி வைத்துள்ள பப்பாளிபழம்,கொய்யாப்பழம் மற்றும் வாழைப்பழத்தை போட்டு 15 நிமிடங்கள் குறைவான தணலில் கலந்து விட்டு பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி 5 நிமிடங்கள் பழங்களை நன்றாக ஆற வைக்கவும்.
  4. ஆற வைத்த பப்பாளிபழம்,கொய்யாப்பழம் மற்றும் வாழைப்பழங்களை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாய் வைத்து அரைத்து வைத்துள்ள பழ கலவையை ஊற்றி இதனுடன் 1/2 கிலோ சர்க்கரையை போட்டு கலந்து பழ கலவை கெட்டியாக வரும் வரை நன்றாக கலந்து விடவும்.
  6. இதனுடன் 2 மில்லி எலுமிச்சம் பழ சாறை ஊற்றி கலந்து விடவும்.
  7. தேவையெனில் ஒரு சிட்டிகை  சிகப்பு கலர் பொடியை  போட்டு கலந்து விடவும்.
  8. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி வைத்து 30 நிமிடங்கள் ஜாமை ஆற வைத்த பின்னர் தோசை மற்றும் பிரட் உடன் பரிமாறவும்.
  9. சுவையான மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜாம் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago