முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

Cooking time in minutes: 
30
Ingredients: 

தேங்காய் எண்ணெய் தயார் செய்யத் தேவையான பொருள்;

  1. தேங்காய் -5.
Method: 

செய்முறை ;-

  1. 5 தேங்காய்யை உடைத்து தேங்காய்யை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
  2. மிஸ்சி ஜாரில் வெட்டி வைத்த தேங்காய்யை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து,வடிகட்டி தேங்காய் பாலை தயார் செய்து கொள்ளவும்.
  3. வெட்டி வைத்துள்ள அனைத்து தேங்காய் துண்டுகளையும் மிஸ்சி ஜாரில் அரைத்து வடிகட்டி தேங்காய் பாலை தயார் செய்து கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் தயார் செய்த தேங்காய்பாலை ஊற்றி ஒரு நாள் இரவு முழுவதும் மூடி போட்டு மூடி வைக்கவும்.
  5. மறுநாள் காலை திறந்து பார்க்கும் பொழுது பாத்திரத்தின் மேல் பகுதியில் பாலாடை போல் படர்ந்து இருக்கும்,அந்த ஏட்டை ஒரு கடாயில் எடுத்துக்கொள்ளவும்.
  6. கடாய்யை அடுப்பில் வைத்து குறைவான தணலில் சூடு படுத்த தேங்காய் எண்ணெய் பிரிந்து வருவதை பார்க்க முடியும்.
  7. தொடர்த்து 20 நிமிடம் குறைவான தணலில் சூடுபடுத்த தேங்காய் எண்ணெய் நன்கு பிரிந்து வரும்.
  8. இப்போது அடுப்பில் இருந்து கடாய்யை இறக்கி விடலாம்.
  9. 30 நிமிடம் கழித்து சூடு ஆறிய பின்னர் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
  10. வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்