முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உடம்பு நமச்சல் | தோல் அரிப்பு | ஊறல் அரிப்பு | அரிப்பு நீங்க | தேக எரிச்சல்

siddha-3

 1. உடம்பு நமச்சல்,தடிப்பு நீங்க ;-- வேப்பமரப்பட்டையை இடித்து தூளாக்கி அந்த தூளை உடம்பில் பூசி அரைமணி நேரம் கழித்து குளிக்கலாம்.
 2. உடம்பு நமச்சல் அகல ;-- ஆவராம்பூ,பாசிப்பயறு கலந்து அரைத்து உடம்பில் பூசி குளித்து வரலாம்.
 3. தோல் தடிப்பு ;-- தும்பை இலைச்சாறு சளி மற்றும் சளிகாய்ச்சலை நீக்குவதோடு சொறி,சிரங்கு,தோல் தடிப்பு ஆகியவற்றை நீக்கவல்லது.
 4. அரிப்பு மாற  ;-- மாதுளம் பழச் சாறை புழுவெட்டு உள்ள இடத்தில் தேய்க்கலாம்.
 5. அரிப்பு,சிறு புண்கள் ஆற ;-- கீழாநெல்லி இலைகளை அரைத்து உடம்பில் தேய்த்து குளிக்கலாம்.
 6. உடல் அரிப்பு நீங்க ;-- வண்ணிமரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து தினசரி ஒரு அவுனஸ் சாப்பிட்டு வரலாம்.
 7. ஊறல் ;-- ஆடாதோடை இலை,சங்கன் இலை கஷாயம் செய்து குடிக்கலாம்.
 8. தேக எரிச்சல் ;-- கட்டி கொடி இலையையும்,வேப்பங்கொழுந்தையும் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம்.
 9. நமைச்சல் சிரங்கு தீர ;-- துளசி இலையை அரைத்து பூசி வர குணமாகும்.
 10. உடல் எரிச்சல் குணமாக;-- இலந்தை மரத்தின் பூவை சுத்தம் செய்து மைபோல் அரைத்து உடல் முழுவதும் பூசிக்கொள்ள எரிச்சல் தணியும்.
 11. தோல் அரிப்பு குணமாக;-- வெள்ளறுகு இலைகளை பொடி செய்து 5 கிராம் வீதம் பாலில் சாப்பிட்டு வர அரிப்பு மறைந்து குணமாகும்.
 12. ஊறல் அரிப்பு குணமாக;-- சரக்கொன்றை இலையை அரைத்து பற்று போட ஊறல் அரிப்பு போன்ற நோய்கள் குணமாகும்,மேனியும் அழகு பெறும்.
 13. உடல்  நமச்சல் தீர ;-- மருதோன்றிஇலை, மிளகு,பூண்டு மற்றும் மஞ்சள் போட்டு அரைத்து வெறும்  வயிற்றில் சாப்பிட உடல்  நமச்சல் தீரும்.
 14. அரிப்பு நீங்க ;-- கொன்றைவேர் பட்டையுடன் வில்வ ஓடு போட்டு அரைத்து பொடி செய்து பாலில் குடிக்க அரிப்பு நீங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்