முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பல்வலி, பல்கூச்சம், பல் ஆரணி சரியாக சித்த மருத்துவ குறிப்புக்கள்

  1. பல் உறுதியாக ;-- மாவிலையை பொடி செய்து பற்களைத் துலக்கி வந்தால் பல் உறுதி பெறும்.
  2. பல் நோய்;-- மகிழம் இலையை கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர நோய் எதுவும் அணுகாது.  
  3. பல்வலி நிவாரணம் பெற ;-- கோவைப்பழம் சாப்பிடலாம்.
  4. பல்வலி,ஈறுவீக்கம்,பல்லில் ரத்த கசிவு,பல்சொத்தை  வராமல் இருக்க ;-- செவ்வாழைப்பழத்தை இரவு சாப்பிட்டு வரலாம்.
  5. பல் ஆடுதல் ;-- மகிழ மரக்காயை மென்று அடக்கி வைத்திருந்து  துப்ப பல் ஆடுதல்  சரியாகி உறுதிப்படும்.
  6. பல் வலி குணமாக;-- ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு அடக்கிக் கொள்ளலாம்.
  7. பற்கள் மற்றும் எலும்புகள் உறுதி பெற;-- ஒரு நாள் விட்டு ஒருநாள் அதிகாலை வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டு வரலாம்.
  8. பல்லரணை ;-- கற்கண்டு அடிக்கடி பயன்படுத்தி வர குணமாகும்.
  9. பல் உறுதியாக;-- குறைந்த பட்சம் 10 முறையாவது பற்களால் நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
  10. பல் உறுதியாக ;-- பிரஷ் கொண்டு பல் துலக்குபவர்கள் வாய் கொப்பளிக்கும் போது கட்டாயம் ஈறுகளை அழுத்திக் கொடுத்து வர உறுதியாகும்.
  11. பல்லில் சீழ்வடிதல் ;-- பிரமதண்டு இலையை எரித்து அந்த சாம்பளை வைத்து பல் தேய்த்து வர ஆட்டம்,பல்சொத்தை,பல்கரை,பல் சீழ்வடிதல் தீரும்.
  12. பல்வலி,பல் அரணை தீர ;-- கண்டங்கத்திரி பழத்தை நெருப்பில் இட்டு வாயில் புகை பிடிக்க குணமாகும்.
  13. பல் கூச்சம்,ஈறுவீக்கம் தீர ;-- புளியங்கொட்டை தோல்,கருவேலம் பட்டை தூள் மற்றும் உப்பு கலந்து பல் துலக்கலாம்.
  14. குழந்தைகளுக்கு பல் முளைக்கும் போது ஏற்படும் பேதி நிற்க ;-- பேய் மிரட்டி இலைசாற்றை 5 துளி வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
  15. பல் உறுதியாக ;-- காலை இரவு இருவேளை கட்டாயம் பல் துலக்க வேண்டும்,சாப்பிட்ட பின் பல் துலக்கி விடுவது மிக நன்று.
  16. ஈறு பலமடைய ;-- மாசிக்காயை தூளாக்கி நீரில் காய்ச்சி வாய் கொப்பளிக்கலாம்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago