முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சுரைக்காயின் மருத்துவ பயன்கள்

 • சுரைக்காயில் நீர் சத்து அதிகமாக உள்ளது.
 • சுரைக்காய் சிறுநீரகத்தின் செயல்பாட்டை அதிகரித்து நன்கு இயங்க உதவுகிறது.
 • உடல் சூட்டின் காரணமாக வரும் கண் எரிச்சல் மற்றும் கண்களில் ஏற்படும் பலவேறு நோய்களை சரிசெய்ய சுரைக்காய் உதவுகிறது.
 • சுரைக்காய் நமது உடலை சுறுசுறுப்பாக இயங்க வைத்து உடலின் பொலிவை கூட்டுகிறது.
 • நமது உடலில் உள்ள கெட்ட நீரை சுரைக்காய் வெளியேற்றுகிறது.
 • நமது உடலின் ரத்த ஓட்டத்தை சுரைக்காய் சீர் செய்கிறது.
 • வெள்ளையணுக்களையும், சிகப்பணுக்களையும் அதிகரிக்க சுரைக்காய்யை சாப்பிடலாம்.
 • சுரைக்காய்யை  தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் உடல் பருமன் குறைய வாய்ப்புள்ளது.
 • 40 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு ஏற்படும் கால் வீக்கம்,கால் பாத  எரிச்சலை சுரைக்காய்  சரி  செய்கிறது.
 • சுரைக்காய்யை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் உள்ள பித்தம் குறைந்து மயக்கம் மற்றும் தலைசுற்றல் குணமாகிறது.
 • சிறுநீர் பாதையில் உள்ள கழிவுகளையும்,புண்களையும் நீக்கி சிறுநீரை நன்கு பிரிய வைத்து சிறுநீரகத்தை சுரைக்காய் பாதுகாக்கிறது.
 • நார்சத்து அதிகமாக உள்ளதால் சுரைக்காய் மலச்சிக்கலை நீக்குகிறது.
 • கால்சியம்,மெக்னிசியம் போன்ற சத்துக்கள் சுரைக்காயில் நிறைந்துள்ளது.
 • சுரைக்காயில் சுண்ணாம்பு சத்து,இரும்பு சத்து,பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் அதிகமாக உள்ளது.
 • சிறிதளவு சுக்கை சுரைக்காயுடன் அரைத்து பற்றுப்போட அடிக்கடி ஏற்படும் தலைவலி நீங்கும்.
 • பெண்கள் தினமும் சுரைக்காய்யை சாப்பிடுவதால் கர்ப்பப்பை பலமடையும்.
 • அதிகம் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு சுரைக்காய் நல்ல மருந்தாக உள்ளது,உடலை குளிர்வித்து உடல் சூடு காரணமாக வரும் பலவேறு நோய்களை சுரைக்காய் தடுக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்