முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்

சனிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

பாதுகாப்பு பணிகளுக்காக ...

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்கவும், பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்களை ஒடுக்கவும் நம் ராணுவ வீரர்கள் இரவு பகலாக போராடிவருகின்றனர்.  இதனால் ஏற்படும் உயிர்சேதங்களை குறைக்கும் வகையில், பாதுகாப்பு பணிகளுக்காக எல்லையில்இந்தியா அதிஉயர்-தொழில்நுட்ப திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது. இதற்காக ரோபோக்களை பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டிருந்தது.

அமைச்சகம் ஒப்புதல்

இதையடுத்து ரோந்து பணிகள் மேற்கொள்வது, வெடிபொருட்களை கொண்டுசெல்வது உள்ளிட்ட பணிகளுக்காக மொத்தம் 544 ரோபோட்கள் தேவைப்படுவதாக இந்திய ராணுவம் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள், டிரான்ஸ்மிட்டர் கருவுகள் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்படவுள்ள இந்த ரோபோக்கள் ராணுவத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவிற்குள் ஊடுருவலை தடுப்பதற்கு மேற்கு எல்லையில் சுமார் 2900 கிலோ மீட்டர் தொலைவில் 5 அடுக்குகள் கொண்ட பாதுகாப்பு அரணை உருவாக்குவும் திட்டமிடபட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து