முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாளில் ரூ. 3.97 கோடி திருப்பதியில் உண்டியல் வசூல்

புதன்கிழமை, 31 ஜூலை 2019      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த திங்கட்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ. 3.97 கோடி வசூலாகியுள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திங்கட்கிழமை முழுவதும் 86,372 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 28,972 பேர் முடி காணிக்கை செலுத்தினர். நேற்று முன்தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்றும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. அவர்கள் 7 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனர். நேர ஒதுக்கீடு டோக்கன் ரூ. 300 விரைவு தரிசனம், திவ்ய தரிசன பக்தர்கள் 3 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசித்து திரும்பினர். திங்கட்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ. 3.97 கோடி வசூலாகியுள்ளது.

திருப்பதியில் ஆகஸ்டு மாத நடைபெற உள்ள உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. திருப்பதியில் ஆண்டுதோறும் பலவிதமான உற்சவங்கள் தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதை வருடாந்திர, மாதாந்திர, வாராந்திர, தினசரி உற்சவங்கள் என வகைப்படுத்தி உள்ளது. இதில் ஏழுமலையானுக்கு நடைபெறும் உற்சவங்கள் மட்டுமல்லாமல் அவரின் தொண்டர்களான ஆழ்வார்களின் திருநட்சத்திரங்களையும் உற்சவங்களாக தேவஸ்தானம் நடத்தி வருகிறது. மாதந்தோறும் திருப்பதியில் நடக்கும் உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் அம்மாத தொடக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அதன்படி ஆகஸ்டு மாதம் திருப்பதியில் நடைபெற உள்ள உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

அதன்படி ஆகஸ்டு 3-ம் தேதி ஆண்டாள் திருவாடிபூரம் உற்சவம், 5-ம் தேதி கருட பஞ்சமி, 6-ம் தேதி கல்கி ஜெயந்தி, 9-ம் தேதி வரலட்சுமி விரதம், தரிகொண்ட வெங்கமாம்பா ஜெயந்தி, 10-ம் தேதி பவித்ரா உற்சவத்துக்கு அங்குரார்ப்பணம், 11-ம் தேதி மதத்ரய ஏகாதசி, 11,13-ம் தேதி வருடாந்திர பவித்ரோற்சவம், 12-ம் தேதி நாராயணகிரியில் சத்ரதபனோற்சவம், 15-ம் தேதி ஆடி பவுர்ணமி, ஹயக்கிரீவ ஜெயந்தி, விகனஸ் ஜெயந்தி, 16-ம் தேதி ஏழுமலையான் விகனஸ் ஆச்சார்யர் சந்நிதி எழுந்தருளல், 23-ம் தேதி கோகுலாஷ்டமி, 24-ம் தேதி உடலோற்சவம் நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து